நள்ளிரவிலிருந்து வந்த அழைப்புக்கள்! கொழும்பில் இளம் பெண்களுடன் அதிரடியாக கைதான இளைஞர்கள்
கொழும்பு - மஹரகம, பன்னிப்பிட்டிய,ஹைலெவல் வீதியில் பணத்திற்காக பந்தயம் கட்டி மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் சாகம் காட்டிய 18 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகத்திற்குரிய இளைஞர்களுடன் 11 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு முச்சக்கர வண்டியும் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, மஹரகம பொலிஸ் போக்குவரத்துப் பிரிவுக்கு, ஒரு வாட்ஸ்அப் குழு மூலம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு பணத்திற்காக மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் பயணிக்க இளைஞர்கள் குழு தயாராகி வருவதாக தகவல் வழங்கப்பட்டுள்ளது.
நள்ளிரவு முழுவதும் வந்த தொலைபேசி அழைப்புக்கள்
மேலும், மோட்டார் சைக்கிள்களை சத்தமாகவும் தொடர்ச்சியாகவும் செலுத்தி இடையுறுகளை ஏற்படுத்துவதாக நேற்று முன்தினம் (13) நள்ளிரவு முதல் பன்னிப்பிட்டிய பகுதி மக்களிடமிருந்து பல அழைப்புகள் வந்துள்ளன.

இதனையடுத்து உடனடியாக செயற்பட்ட மஹரகம பொலிஸ் அதிகாரிகள், சந்தேக நபர்கள் தங்கள் மோட்டார் சைக்கிள்களில் மிகவும் பாதுகாப்பற்ற முறையில் பயணித்தபோது அவர்களை கைது செய்துள்ளார்.
இதன்போது சில இளைஞர்கள் தங்கள் மோட்டார் சைக்கிள்களில் இளம் பெண்களை பின்னால் ஏற்றிச் செல்லும் போட்டியில் ஈடுபட்டதைக் காண முடிந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மோட்டார் சைக்கிள்களில் பயணிக்க வரும் இளைஞர்களுக்கு அருகிலுள்ள ஒரு இரவு உணவகத்திலிருந்து ஆதரவு கிடைப்பதாகவும் தகவல்கள் தெரியவந்துள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலை
பொலிஸ் அதிகாரிகள் அந்த இடத்தை சோதனை செய்தபோது, சில இளைஞர்கள் உணவகத்திற்குள் நுழைந்து உணவு வாங்க வந்தவர்கள் போல் நடந்து கொண்டதாகவும் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதன்போது கைது செய்யப்பட்ட இளைஞர்கள் ஹோமாகம, மஹரகம, மத்தேகொட, கொட்டாவ மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
இவர்கள் நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளனர். மஹரகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, தலைமைப் பொலிஸ் பரிசோதகர் ஹர்ஷ டி சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவில் 1 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படவில்லை... பலரும் அறிந்திராத தகவல் News Lankasri
Bigg Boss: இரண்டாவது எவிக்ஷனில் இன்று வெளியேறுவது யார்? எவிக்ஷன் கார்டை காட்டிய விஜய் சேதுபதி Manithan