யாழில் மீட்கப்பட்ட 18 புத்தர் சிலைகள் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பு
யாழ்.வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் நேற்று (15) கரையொதுங்கிய மர்மவீட்டில் இருந்த 18 புத்தர் சிலைகள் பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
காலநிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக அண்மைக்காலத்தில் தென்கிழக்காசிய கடல் பகுதியில் கடல் சீற்றங்கள், புயல் உட்பட்ட இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டன.
பல மரபு அம்சங்கள்
இந்தநிலையில், குறித்த சிலைகள் மியன்மார், தாய்வான், தாய்லாந்து, மலேஷியா, இந்தியா, போன்ற நாடுகளில் இருந்து வந்து இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

குறித்த வீட்டில் பௌத்த சமயத்தினை தாங்கிய பல மரபு அம்சங்கள் இருப்பதாகவும் தெரியவருகிறது.
இந்தநிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற மருதங்கேணி பொலிஸார் அதில் காணப்பட்ட 18 புத்தர் சிலைகளையும் செப்பேடுகளையும் மீட்டு மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் வைத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
                                            
                                                                                                                                    
    
    
    
    
    
    
    
    
    
    Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
    
    அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri