மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்ட லசந்த விக்ரமதுங்கவின் 17ஆவது ஆண்டு நினைவு தினம்
படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் 17ஆவது ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு, நேற்று(09.01.2026) மாலை மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் மற்றும் மட்டக்களப்பு ஊடக அமையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.
நினைவு தினம் அனுஷ்டிப்பு
மட்டக்களப்பு ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மட்டக்களப்பு -அம்பாறை மாவட்டங்களிலிருந்து ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது, உயிரிழந்த ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் உருவப்படத்துக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதுடன், ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சிரேஸ்ட ஊடகவியலாளர்களினால் லசந்த விக்ரமதுங்கவின் நினைவுரைகள் இடம்பெற்றுள்ளது.








ரஷ்யாவுடன் இறுகும் போர்... பிரித்தானிய இராணுவத்திற்கு 28 பில்லியன் பவுண்டுகள் நிதி பற்றாக்குறை News Lankasri
Bigg Boss: சட்டென பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்! ஒட்டுமொத்த வீடும் கண்ணீரில் மூழ்கிய தருணம் Manithan