செஞ்சோலை படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு (Photos)

Jaffna Mullaitivu Sri Lanka Politician Sri Lankan Peoples
By Varunan Aug 14, 2022 09:18 AM GMT
Report

முல்லைத்தீவு - வள்ளிபுனம் கிராமத்தில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலில் உயிரிழந்த பாடசாலை மாணவிகள் 54 பேர் உட்பட கொல்லப்பட்ட 61 பேரின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு முல்லைத்தீவு - வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள இடைக்கட்டு சந்தி பகுதி மற்றும் விமான தாக்குதல் இடம்பெற்ற செஞ்சோலை வளாகம் அமைந்திருந்த பகுதியில் இன்று(14) உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் பங்கேற்பு

செஞ்சோலை வளாகம் அமைந்திருந்த பகுதியில் உயிரிழந்த மாணவி ஒருவரின் உறவினரால் இன்று காலை சுடர் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து செஞ்சோலை வளாகத்துக்கு செல்லும் வீதியின் ஆரம்பத்தில் உள்ள நினைவேந்தல் வளைவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

செஞ்சோலை படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு (Photos) | 16Th Anniversary Of Sencholai Massacre

இந்த நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகளின் திருவுருவப்படத்துக்கு சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் உயிரிழந்த மாணவிகளின் பெற்றோர் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

செஞ்சோலை படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு (Photos) | 16Th Anniversary Of Sencholai Massacre

நிகழ்வை அச்சுறுத்தும் செயற்பாடு

நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்ற பகுதிகளில் சிவில் உடைதரித்த புலனாய்வாளர்கள் மற்றும் படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டதோடு புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் செயற்பாட்டிலும் ஈடுபட்டிருந்தனர் .

செஞ்சோலை படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு (Photos) | 16Th Anniversary Of Sencholai Massacre

கடந்த 2006ஆம் ஆண்டு இதே நாள் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர்கள் வளாகத்தில் முதலுதவி பயிற்சிக்காக தங்கி நின்ற மாணவர்கள் மீது இலங்கை விமானப்படை குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில் 54 மாணவிகள் கொல்லப்பட்டதுடன் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

ரவிகரனின் மக்கள் தொடர்பகம்

இதே வேளை  முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில்  இன்று(14) இந் நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.

செஞ்சோலை படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு (Photos) | 16Th Anniversary Of Sencholai Massacre

யாழ். பல்கலைக்கழகம்

செஞ்சோலை படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான தூபியில் இன்று(14) காலை 11:30 மணியளவில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

செஞ்சோலை படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு (Photos) | 16Th Anniversary Of Sencholai Massacre

இதன் போது படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் நினைவுருவ படத்திற்கு ஈகைச் சுடரேற்றப்பட்டதோடு, மலரஞ்சலி செலுத்தப்பட்டு ஒரு நிமிட அகவணக்கமும் செய்யப்பட்டுள்ளது.

செஞ்சோலை படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு (Photos) | 16Th Anniversary Of Sencholai Massacre

இதனை தொடர்ந்து யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜகுமாரால் படுகொலை தொடர்பான நினைவுரையும் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் பிரதிநிதிகள், மாணவர்கள், பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்தி- தீபன்

GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, Bochum, Germany, Brampton, Canada

23 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Bremen, Germany

23 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரிப்பட்டமுறிப்பு, கற்சிலைமடு

21 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய், London, United Kingdom, Toronto, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

24 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா, போரூர், India

19 Apr, 2014
மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, London, United Kingdom

21 Apr, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, துணுக்காய், மல்லாவி

24 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், மதுரை, தமிழ்நாடு, India

25 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US