ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இலட்சக்கணக்கான வாகனங்கள் விநியோகம்
ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் மூலம் 2025 மார்ச் மாதம் முதல் 2026 செப்டம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் 167,569 வாகனங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாகனங்களுக்கான கேள்வி அதிகரித்திருந்ததுடன், வாகனங்களை மீள் ஏற்றுமதி செய்யும் நடவடிக்கைகளில் தடைகள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களிலும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வாகனங்களைக் கையாளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகத் துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 2025 மார்ச் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் 86,389 வாகனங்கள் கையாளப்பட்டுள்ளன. அவற்றில் 30,809 புதிய வாகனங்களும் 55,580 பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் அடங்குகின்றன.
இறக்குமதி கட்டுப்பாடுகள்
அதேவேளை, 2026 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மேலும் 81,180 வாகனங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 25,018 புதிய வாகனங்களும் 56,162 பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் உள்ளடங்குவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ,விரைவான பதிலளிப்பு மற்றும் நடைமுறை ரீதியான ஆதரவு ஆகியவற்றைப் பாராட்டி, இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் ((VIAL), ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகக் குழுமத்தைப் பாராட்டியுள்ளது.
குறிப்பாக, வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் துறைமுகத்தில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கான தாமதக் கட்டணங்களைத் தள்ளுபடி செய்தல் மற்றும் சலுகைகளை வழங்குதல் போன்ற வாகன இறக்குமதியாளர்கள் எதிர்கொண்ட சவால்களுக்குத் தீர்வுகளை வழங்குவதில் துறைமுக நிர்வாகம் நெகிழ்வுத்தன்மையை வெளிப்படுத்தியிருந்தது.