கொழும்பில் வாகன விபத்து: 15 வயது சிறுவன் பலி
கொழும்பு-மகரகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 15 வயது சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது நேற்று(04.09.2023)இரவு இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளொன்றுடன் பாரவூர்தி மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது மோட்டார் சைக்கிளின் பின் ஆசனத்தில் இருந்து பயணித்த சிலம்பரசன் வாகீசன் (வயது 15) என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற 27 வயது இளைஞர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இளைஞர், உயிரிழந்த சிறுவனின் உறவினர் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்திற்கு காரணமான பாரவூர்தியின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் செய்துள்ள மாஸ் வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan