கொழும்பின் புறநகர் பகுதியில் அதிரடி நடவடிக்கை - பலர் பொலிஸாரினால் கைது
இரத்மலானை பகுதியில் பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்புடைய 15 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிஸ்ஸ குற்றப்பலனாய்வுப் பிரிவினர் நடத்திய சோதனையில் இந்த 15 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 5 வாள்கள் மற்றும் 40 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
முக்கிய குற்றவாளிகள் கைது
தற்போது வெளிநாட்டிலிருந்து கொண்டு பாதாள உலகச் செயல்களை இயக்கி வரும் அல்டோ தர்மா மற்றும் சாண்டோ ஆகிய இரு முக்கியக் குற்றவாளிகளுடன் இவர்களுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பது ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் இந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் உள்ளூர் தரகர்களாக செயல்பட்டு வந்ததாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களுடன் சந்தேக நபர்களிடம் கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.