இலங்கையில் 15 பிளாஸ்டிக் பொருட்களுக்கு விரைவில் தடை
பொதுவாகப் பயன்படுத்தப்படும் பதினைந்து பிளாஸ்டிக் பொருட்கள் விரைவில் தடைசெய்யப்படும் என்று இலங்கை சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சச்செட் பக்கட்டுகள், ஊதப்பட்ட பொம்மைகள் மற்றும் பிளாஸ்டிக் தண்டுகளுடன்கூடிய காது தூய்மை செய்யும் பஞ்சு ஆகியவை தடைசெய்யப்பட்டுள்ளன.
வர்த்தமானிக்காக மேலும் இரண்டு பட்டியல்கள் தொகுக்கப்பட்டு வருவதாக அமைச்சகதரப்பு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் 31 முதல், இலங்கையில 20 மில்லி அல்லது 20 கிராம் மற்றும்அதற்கும் குறைவான சச்செட்டுகளைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
(உணவு மற்றும் மருந்துகளை பொதி செய்வதைத் தவிர) அத்துடன் ஊதப்பட்ட பொம்மைகள் (பலூன்கள், பந்துகள், நீர் மிதக்கும் ஃ பூல் பொம்மைகள் மற்றும் நீர் விளையாட்டு கியர் தவிர) மற்றும் பிளாஸ்டிக்தண்டுகளுடன் கூடிய காது தூய்மை செய்யும் பஞ்சு (மருத்துவ, மருத்துவசிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டவை தவிர) தடைசெய்யப்பட்டுள்ளன.