கோதுமை மாவின் விலை 15 வீதத்தால் அதிகரிப்பு
உலக சந்தையில் கோதுமை மாவின் விலை 15 சதவீம் அதிகரித்துள்ளது.
கருங்கடல் வழியாக தானிய போக்குவரத்துக்கு ரஷ்யா அனுமதிக்காததால் உலக சந்தையில் இவ்வாறு கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரஷ்யாவில் இந்த முடிவின் மூலம் எதிர்காலத்தில் உணவு நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அனுமதி இல்லை

உக்ரைனுடனான ஒப்பந்தத்தை மீறி கருங்கடல் வழியாக தானியங்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை என ரஷ்யா அறிவித்துள்ளது.
உக்ரைனும் ரஷ்யாவும் உலகின் இரண்டு பெரிய தானிய உற்பத்தி நாடுகளாக அறியப்படுகின்றன. இருப்பினும், தானியக் கப்பல்களைத் தவிர பயணிகள் கப்பல்கள் கருங்கடல் வழியாக செல்ல ரஷ்யா அனுமதிக்காது என்று பிரித்தானியா குற்றம் சாட்டியது.
பயணிகள் கப்பல்களை வெடிக்கச் செய்வதற்காக கருங்கடலில் கடல் குண்டுகளை ரஷ்யா சேர்த்துள்ளதாக பிரித்தானிய உளவுத்துறை வெளிப்படுத்தியுள்ளது.
உலக அளவிலும் தமிழ்நாட்டிலும் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri