தீயில் எரித்து ஈகைச் சாவடைந்த முருகதாசனின் 13 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு(Photos)
இலங்கை அரசின் தமிழர் மீதான இனப்படுகொலை உச்சம் பெற்றிருந்த வேளையில் சுவிஸ் ஜெனிவா ஐ.நா முன்றலில் தன்னைத் தீயில் எரித்து ஈகைச் சாவடைந்த ”ஈகைப்பேரொளி முருகதாசன்” னின் 13ம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வுகள் பிரித்தானியத் தலைநகர் லண்டனில் Holders Hill Rd, London NW7 1NB எனும் முகவரியில் அமைந்துள்ள ஈகைப்பேரொளி முருகதாசன் உட்பட்ட 21 தியாகிகளது நினைவுக் கல்லறையில் நேற்று நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் பொதுச்சுடரினை ஈகைப்பேரொளி முருகதாசனின் சகோதரர் வர்ணகுலசிங்கம் சுதன் ஏற்றிவைத்த நிலையில், அவரது தாயாரும் சகோதரியும் ஈகியர் கல்லறைக்கான மலர் மாலையினை அணிவித்து அகவணக்கம் செலுத்தினர்.
இதனை தொடர்ந்து சிறுவர்கள் மற்றும் அங்கு வருகைதந்திருந்த மக்களால் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
ஈகைப்பேரொளி முருதாசன், பேரினவாத அரசின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது “சர்வதேசமே ஈழத்தமிழர்களைக் காப்பாற்று” என உரத்துக் குரல்கொடுத்தவாறு தன்னுடலை தீக்கிரையாக்கினார்.
7 பக்கங்களில் “உலக சமூகத்துக்குத் தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்” என்ற தலைப்பில் ஒரு மரண சாசனத்தை எழுதி வைத்து விட்டு ஜெனீவா மனித உரிமை முன்றலில் 2009 பெப்ரவரி 12ஆம் திகதி அன்று இரவு முருகதாசன் தீக்குளித்து மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.



சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 6 நாட்கள் முன்
பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த திவ்யாவுக்கு ரூ.50 லட்சம் மட்டுமின்றி மேலும் ஒரு பெரிய பரிசு! என்ன பாருங்க Cineulagam