ஆயுதங்களை ஒப்படைப்பேன்! மீறினால் இரத்தக்களறி ஏற்படும் : இலங்கை அரசாங்கத்தை எச்சரித்த விடுதலைப் புலிகளின் தலைவர்

13th amendment Ranil Wickremesinghe Sri Lanka Final War Sri Lanka Government Vajira Abeywardena
By Benat Aug 17, 2023 11:09 AM GMT
Report

நோர்வேயுடனான ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு பலேகல பிரதேசத்துக்கு வந்து இலங்கை தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்  உரையாற்றினார், அதில் இன்றைய தினம் எனது ஆயுதங்கள் அனைத்தையும் ஒப்படைக்கிறேன். ஆனால் எனது மக்களின் உயிர்களை பாதுகாக்கும் பொறுப்பு மீண்டும் எமக்கு ஏற்பட்டால் நாங்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தவேண்டி ஏற்பட்டால் இரத்தக் களறி ஏற்படுத்துவேன் என தெரிவித்தே ஆயுதங்களை கையளித்தார் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய  தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

அரசியலமைப்பின் 13ஆம் திருத்தம் நாட்டின் சட்டம். அதன் மீது சத்தியப்பிரமாணம் செய்தே அனைவரும் நாடமாளுமன்றத்திலும் மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களிலும் இருக்கின்றனர். மாகாணசபை வரப்பிரசாதங்களை மக்கள் பிரதிநிதிகள் மாத்திரம் அனுபவிக்காமல் இலங்கை மக்களும் அதனை அனுபவிக்க வேண்டும். அதனாலே அதனை செயற்படுத்த முயற்சிக்கிறோம்.

ஆயுதங்களை கீழே வைக்க நடவடிக்கை எடுத்த பிரபாகரன்

அத்துடன் 13ஆம் திருத்தம் மூலம் ஒருபோதும் நாடு பிளவுபடப்போவதில்லை. நாடு பிளவுபடாமல் இருப்பதற்காகவே ஜே.ஆர்.இந்திய இலங்கை திம்பு கலந்துரையாடலில்  கலந்துகொண்டிருந்தபோது விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்  பிரபாகரன் இந்தியாவுக்கு சென்று கலந்துரையாடிய பின்னர் ராஜிவ் காந்தி இலங்கைக்கு வந்து ஒப்பந்தம் கைச்சாத்திட்டார்.

ஆயுதங்களை ஒப்படைப்பேன்! மீறினால் இரத்தக்களறி ஏற்படும் : இலங்கை அரசாங்கத்தை எச்சரித்த விடுதலைப் புலிகளின் தலைவர் | 13Th Amendment Ltte Prabhakaran

வடக்கு - கிழக்கு பகுதிக்கு மாகாண முறையொன்றை அறிமுகப்படுத்துமாறு இந்தியாவின் திட்டத்தில் இருந்தது. ஆனால் பிளவுபடாத நாடொன்றை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே ஜே,ஆர். அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொண்டு மாகாணசபை முறையை முழு நாட்டுக்கும் ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தார்.

அதேபோன்று ரணில் விக்ரமசிங்க நோர்வேயில் சமாதான பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு பிரபாகரன் ஆயுத்தை கீழே வைக்க நடவடிக்கை எடுத்தார். ஆனால் அது சட்டம் அல்ல. அந்த ஒப்பந்தம் இன்று நூலகத்திலேயே இருக்கிறது.

ஒப்பந்தத்தை ஏற்றுக்காெண்டு பிரபாகரன் பலேகல பிரதேசத்துக்கு வந்து இலங்கை தொடர்பில் உரையாடல் ஒன்றை மேற்கொண்டார். அதில் இன்றைய தினம் எனது ஆயுதங்கள் அனைத்தையும் ஒப்படைக்கிறேன். ஆனால் எனது மக்களின் உயிர்களை பாதுகாக்கும் பொறுப்பு மீண்டும் எமக்கு ஏற்பட்டால் நாங்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தவேண்டி ஏற்பட்டால் இரத்தக் களறி ஏற்படுத்துவேன் என தெரிவித்தே பிரபாகரன் ஆயுதங்களை கையளித்தார்.

அதன் பிரகாரமே வரதராஜபெருமாள் முதலமைச்சராக சத்திய பிரமாணம் செய்தார். அதனால் இந்த வரலாற்றை தெரிந்துகொண்டு அவதானமாக செயற்படவேண்டும்.

அதனால்தான் ரணில் விக்ரமசிங்க அனைவரும் ஏற்றுக்கொள்ள முடியுமான பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருக்கிறார். இதற்கு மாற்றமான நல்ல கருத்துக்கள் இருக்குமானால் அவர்கள் அதனை முன்வைக்க வேண்டும்.

அத்துடன் சங்கரத்ன தேரர்களுக்கு 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது  தொடர்பில் தெளிவில்லாமல் இருந்தால் அது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கிறது. அதனால் அரசாங்கம் மஹாசங்க ரத்ன தேர்ரகளுடன் விரைவாக கலந்துரையாடி அவர்களின் சந்தேகங்களை நீக்க நடவடிக்கை எடுப்போம் என குறிப்பிட்டார். 

You My Like This Video 


அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US