ஐபிஎல் ஏலத்தில் 13 வயது வீரரை வாங்கி அனைவரையும் திகைக்க வைத்த ராஜஸ்தான்
சவூதி அரேபியா, ஜெட்டாவில் நடந்த ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் 13 வயதான வைபவ் சூர்யவன்ஸியை 1.10 கோடி ரூபாய்க்கு வாங்கிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி அனைவரையும் திகைக்க வைத்துள்ளது.
இதன் மூலம், ஐபிஎல் பருவத்தில் இடம்பிடித்த இளம் வீரர் என்ற பெருமையை பீகாரைச் சேர்ந்த இந்த இளம் கிரிக்கெட் வீரர் பெற்றார். பீகாரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஸி உள்நாட்டு கிரிக்கெட்டில் மாநிலத்திற்காக விளையாடுகிறார்.
அவர் 19 வயதுக்குட்பட்ட இந்திய பி அணிக்காகவும் விளையாடியுள்ளார். அத்துடன், 19 வயதுக்குட்பட்ட டெஸ்டில் அதிவேக சதம் அடித்த சாதனையையும் படைத்துள்ளார்.
ரஞ்சி ட்ரொபி
2024 ஒக்டோபரில் சென்னை சிதம்பரம் மைதானத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் குறைந்த பந்துகளில் சதம் பெற்றார். இதில் 14, நான்கு ஓட்டங்களும் 4, ஆறு ஓட்டங்களும் உள்ளடங்கியிருந்தன.
2024, ஜனவரி 5, அன்று பட்னாவில் மும்பைக்கு எதிரான ரஞ்சி ட்ரொபி போட்டியின் போது வைபவ் சூர்யவன்ஸி பீகார் அணிக்காக தனது முதல் தர அறிமுகத்தை தொடங்கினார்.
இதன் மூலம், 12 வயது 284 நாட்களில், முதல்தர போட்டியில் அறிமுகமான நான்காவது இளைய இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |