12 வயதான பாடசாலை மாணவியுடன் தனித்திருந்த நபர் கைது!
12 வயதான பாடசாலை மாணவி ஒருவருடன் காட்டுக்குள் தனித்திருந்த நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (16.03.2023) அனுராதபுரம் - வீரபுர பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் 32 வயதுடைய, கிரிபாவ பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

பொலிஸாருக்கு தகவல்
மேலும், சந்தேக நபருடன் இருந்த மாணவியும் கைது செய்த பொலிஸார், அவரை மருத்துவ பரிசோதனைகளுக்கு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
வீரபுர பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்ற நபர் ஒருவர், இவர்கள் இரண்டு பேரையும் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
அதனடிப்படையிலேயே குறித்த இடத்துக்குச் சென்ற பொலிஸார், தேடுதல் நடத்தி சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.
குறித்த பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்று வரும் மாணவி, கல்வி நடவடிக்கைகளை முடித்துவிட்டுக் குறித்த சந்தேக நபருடன் சிறுமி காட்டுப்பகுதிக்குச் சென்றதாக பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri