7 ஆண்டுகளில் 1000இற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்
கடந்த ஏழு ஆண்டுகளில் சுமார் 1,178 கைதிகள் சிறைகளில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர் என இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.
அறிக்கையின்படி, 2019இல் 153 கைதிகளும், 2020இல் 110 பேரும், 2021இல் 103 பேரும், 2022இல் 231 பேரும், 2023இல் 207 பேரும், 2024இல் 188 பேரும், 2025இல் 186 பேரும் தப்பிச் சென்றுள்ளனர்.
நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க
இன்றுவரை சுமார் 474 கைதிகள் மீண்டும் பிடிபட்டுள்ள நிலையில், 734 பேர் சுதந்திரமாக நடமாடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு உறுதியளித்துள்ளது.
அதன்படி, 22வது திருத்தம் இயற்றப்பட்ட பிறகு மாகாணங்களில் மேல்முறையீட்டு நீதிமன்றம் செயல்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
மேலும், வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்துவதற்காக நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதாகவும் அரசு குறிப்பிட்டுள்ளது.
இலங்கைக்கு இழுத்துவரப்பட்ட ஷிரான் பாஸிக் தொடர்பில் திடுக்கிடும் தகவல் : பொலிஸார் விடுத்துள்ள தகவல்கள்
நல்லூர் கந்தசுவாமி கோவில் | கொடியேற்றம்