இலங்கையைச் சேர்ந்த 11 இளைஞர்கள் இந்தியாவில் கைது
இலங்கையைச் சேர்ந்த 11 இளைஞர்கள் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கனடா செல்ல முயற்சித்தமையினால் கைது செய்யப்பட்டு்ள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று(5) இடம்பெற்றுள்ளது.
சட்டவிரோதமாக கனடா செல்ல முயற்சி

இலங்கையில் இருந்து விமானம் மூலம் தமிழகம் சென்று, அங்கிருந்து கனடா செல்ல முயன்ற குற்றத்திற்காக 11 பேர் இந்தியாவின் கியூப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்திலுள்ள விடுதியொன்றில் இவர்கள் தங்கியிருப்பதாக கியூப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமையவே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் கடந்த மாதம் 19ஆம் திகதி விமானம் மூலம் சென்னைக்குச் சென்று அங்கிருந்து கேரளாவின் கடற்கரை நகரான கொள்ளம் பகுதிக்குச் சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் மேலதிக விசாரணைகளை தமிழக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam