புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் இரு பிக்குமார் உட்பட 11 பேர் கைது
வவுனியா - தாலிக்குளம் பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 11 பேரை பூவரசங்குளம் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
தாலிக்குளம் முத்துமாரி அம்மன் கோவில் வளாகத்தில் புதையல் தோண்டப்படுவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில் குறித்த இடத்திற்கு விரைந்து பொலிஸார் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் போது நிலத்தைத் தோண்டிக் கொண்டிருந்த இரு பிக்குமார் உட்பட 11 பேரை கைது செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து நிலத்தை தோண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளதுடன், 2 கார்கள் மற்றும் முச்சக்கரவண்டியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்,
கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.


