இலங்கையில் நூறுக்கும் மேற்பட்ட பொலிஸ் பொறுப்பதிகாரிகள் இடமாற்றம்
இலங்கை பொலிஸ் திணைக்களத்தால் 139 நிலையப் பொறுப்பதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது பொலிஸ் திணைக்கள வரலாற்றில் ஒரே நேரத்தில் செய்யப்பட்ட மிகப்பெரிய இடமாற்றமாகும் என்று பொலிஸ் தரப்புக்கள் தெரிவித்துள்ளன. இந்த இடமாற்றங்கள் 2025 பெப்ரவரி 13 மற்றும் 18 ஆகிய திகதிகளில் இரண்டு கட்டங்களாக நடைமுறைக்கு வருகின்றன.
இடமாற்றம்
கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களில் இருந்து கணிசமான எண்ணிக்கையிலான பொறுப்பதிகாரிகள், சேவைத் தேவைகளின் அடிப்படையில் மாற்றங்கள் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடமாற்றங்கள் தேசிய பொலிஸ் ஆணையத்தின் செயலாளரால் அங்கீகரிக்கப்பட்டு, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
