இந்தியாவிடம் இருந்து 100 மில்லியன் டொலர் நிதி இலங்கைக்கு

india sri lanka money
By Independent Writer Jun 16, 2021 03:00 PM GMT
Report

  இந்திய அரசாங்கம் இந்திய ஏற்றுமதி, இறக்குமதி வங்கியின் ஊடாக, 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனை (Line of Credit) இலங்கைக்கு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.

“சுபீட்சத்தின் நோக்கு“ கொள்கைத் திட்டத்துக்கு அமைய, சூரிய சக்தியிலான மின் உற்பத்தியை அதிகரித்து, தேசிய மின் கட்டமைப்புக்கு மீள்பிறப்பாக்கச் சக்திவளப் பங்களிப்பை அதிகரிக்கும் திட்டத்தை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக, அரச கட்டிடங்கள், சமய ஸ்தாபனங்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் வீடுகளின் பங்களிப்பைப் பெற்று, சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்வதே அரசாங்கத்தின் முக்கிய திட்டமாகும்.

இதன் மூலம் குறைந்த வருமானம் பெறும் வீடுகளுக்கான பொருளாதார நன்மைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் அரச நிறுவனங்களில் மின்சாரத்துக்காக செலவாகும் அதிக தொகையைக் குறைப்பதற்கும் அரசாங்கம் எதிர்பார்த்தள்ளது.

காணித் தட்டுப்பாட்டைத் தவிர்க்கும் வகையில், நீரில் மிதக்கும் சூரிய மின்சக்தி முறைமைகளை நிறுவுவதும் இதில் உள்ளடங்கும். இதன் முதற்கட்டமாக, பாராளுமன்றத்துக்குத் தேவையான மின்சாரம், தியவன்னா ஓயாவை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்படும் திட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

அத்துடன் தேசிய மின் கட்டமைப்புக்குள் பிரவேசிக்க முடியாதிருக்கும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு, மின்கலங்களின் மூலம் சூரிய மின் சக்தி களஞ்சிய வசதிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்துக்காக, இந்திய அரசாங்கமானது இந்திய ஏற்றுமதி, இறக்குமதி வங்கியின் ஊடாக, 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனை (Line of Credit) வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதுடன், இதற்கான இரு தரப்பு கடன் ஒப்பந்தமும் செய்துகொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்துக்கும் இந்திய ஏற்றுமதி, இறக்குமதி வங்கிக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள இந்த கடன் ஒப்பந்தம், இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், மின்சக்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் ஜனாதிபதி முன்னிலையில் நிதி அமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆடிகலவுக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்களுக்கும் இடையில் பரிமாறிக்கொள்ளப்பட்டது.

வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே, மின்சக்தி அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா, இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள் மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.


GalleryGalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US