15 பேரை காவு வாங்கிய கோர விபத்து! அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
எல்ல-வெல்லவாய பிரதான சாலையில் நேற்று இரவு நடந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 மில்லியன் ரூபாவை வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானித்துள்ளது.
பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 15 பேர் உயிரிழந்து பலர் காயமடைந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோர விபத்து
எல்ல-வெல்லவாய வீதியில் இரவு 9 மணிக்கு பிறகு இந்த கோர விபத்து சம்பவித்தது.
இதன்போது, 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 18 பேர் வரையில் படுகாயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், தங்காலை மாநகர சபையின் செயலாளர் டி.டபிள்யூ.கே. ரூபசேன உட்பட நகரசபையின் 12 ஊழியர்கள் இதில் உயிரிழந்துள்ளனர்.
சடலங்கள் தியத்தலாவை, பதுளை மற்றும் பண்டாரவளை மருத்துவமனைகளின் பிணவறைகளில் வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த 2 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக பதுளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.



