உடல் பருமன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 1.7 பில்லியன் மக்கள்
உலகில் வயது வந்தவர்களும், சிறார்களும் என 1.7 பில்லியன் மக்கள் உடல் பருமன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தரவுகளை மேற்கோள்காட்டி வேல்ட் மீட்டர் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் 157 மில்லியன் மக்கள் அதிக எடை கொண்டவர்களாக இருப்பார்கள்
இவர்களில் 340 மில்லியன் இளைஞர்,யுவதிகளும்,39 மில்லியன் சிறார்களும் அடங்குகின்றனர். எதிர்வரும் 2025 ஆம் ஆண்டளவில் சுமார் 167 மில்லியன் மக்கள் உடல் பருமன் அல்லது அதிக எடை கொண்டவர்களாக இருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சீனாவை தாண்டும் இந்திய மக்கள் தொகை
இதனிடையே எதிர்வரும் 15 ஆம் திகதி மொத்த உலக சனத்தொகையின் எண்ணிக்கை எட்டு பில்லியனை தாண்டும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு மதிப்பீடு செய்துள்ளது.
அடுத்த ஆண்டில் சீனாவை தாண்டி, உலகில் அதிக சனத்தொகையை கொண்ட நாடாக இந்தியா மாறும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.