தென்னாப்பிரிக்காவில் துப்பாக்கிச் சூடு! இதுவரையில் 07 பேர் பலி
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டதாகவும், மூன்று பேர் காயமடைந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துப்பாக்கி ஏந்திய கும்பல் ஒன்று இந்த தாக்குதலை நடத்தியுள்ளதுடன் தப்பி ஓடியுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
07 பேர் பலி
இந்த சம்பவம் மிரட்டி பணம் பறித்தல் வழக்குடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுகிறது.

தென்னாப்பிரிக்காவில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களால் நடத்தப்படும் குற்றச் செயல்கள் சமீப காலமாக அதிகரித்து வருவதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் மட்டும் குற்றச் செயல்களால் தினமும் சுமார் 63 பேர் இறந்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மேலும் இது குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அண்ணாமலை, முத்துவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
விஜய்யை நேரில் பார்த்ததும் காவேரி செய்த செயல், சாரதாவிற்கு தெரிந்த உண்மை... மகாநதி சீரியல் Cineulagam