இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலங்கையில் தமிழர்களை இனப்படுகொலை செய்த ராஜபக்சவுக்கு இந்துக்களின் புனிதத் தலமான திருப்பதி கோயிலில் இராஜ மரியாதை அளிப்பது தமிழர்களின் நெஞ்சில் நெருப்பை அள்ளிப்போடுவதாக உள்ளது.
குழந்தைகள், முதியவர்கள் என்று லட்சக்கணக்கான தமிழ் மக்களை குண்டு வீசிக் கொன்றவர் ராஜபக்ச. அவருக்கு ஆயுத உதவி செய்த மத்திய அரசு தற்போது அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிப்பது வெந்த புண்ணில் சூட்டுக்கோல் பாய்ச்சும் வகையில் இருக்கிறது.
தமிழர்களை கொன்ற அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்படுகிறது. ராஜபக்சவை இந்தியா வரவேற்பதும் கோயிலில் அவருக்கு மரியாதை செய்வதும் உலகை ஏமாற்றுவதற்காக நடத்தப்படும் வஞ்சக நாடகம் ஆகும்.
தமிழர்களை இழிவுப்படுத்தும் மத்திய அரசின் இச்செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


|