One moment please..
 
செய்தி
முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னரான முதலாவது இனப் படுகொலை!: பாரிஸ் ஈழநாடு
[ சனிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2009, 03:24.47 PM GMT +05:30 ]
முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னரான முதலாவது இனப் படுகொலை கொழும்பில் அரங்கேற்றப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வியாழக்கிழமை பம்பலப்பிட்டி கடலில் வைத்து நடாத்தப்பட்ட இந்தப் படுகொலை சம்பவத்தில் உயிரிழந்தவர் இரத்மலானையில் வசித்த 26 வயதுடைய பாலகிருஷ்ணன் சிவகுமார் என அடையாளம் காணப்பட்டது.

படுகொலை செய்யப்பட்டவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகின்றது. அவர் வீதியில் சென்ற வாகனங்களுக்கு கல் எறிந்தார் என்றும், அதன் பின்னர் புகையிரதம் ஒன்றின் மீதும் கற்களை வீசியபோது அவரை சிலர் துரத்திச் சென்றதாகவும், அதனால் அவர் கடலில் குதித்ததாகவும் நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர்.

இவரைத் துரத்திச்சென்ற ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவர் கடலினுள் வைத்துத் தாக்கியதாகவும், அந்த தமிழ் இளைஞர் தன்னை விட்டுவிடும்படி கையெடுத்துக் கும்பிட்ட போதும் அவர் தொடர்ந்தும் தாக்கப்பட்டதனால் அவர் நீரில் மூழ்கி இறந்ததாகவும் சாட்சியங்கள் தெரிவிக்கின்றன.

மனநோயாளியான அந்த இளைஞர் தமிழர் என்ற காரணத்தினாலேயே இவ்வாறு சிங்கள இன வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பட்டப்பகலில், பலரும் பார்க்க நடைபெற்ற இந்தப் படுகொலைச் சம்பவத்தை கடற்கரையில் நின்ற சிலர் கைத் தொலைபேசி மூலம் பதிவு செய்து வெளியிட்ட காரணத்தால், குற்றவாளிகளில் ஒருவரான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் குறைந்த பட்ச நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருப்பினும், சிங்கள நீதித்துறை இந்தப் படுகொலையில் தொடர்புள்ள ஏனைய குற்றவாளிகளையும் கைது செய்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்துமா? அப்படி நிறுத்தினாலும் சிங்கள நீதித்துறை பாரபட்சமான விசாரணை நடாத்தித் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குமா? என்பது சந்தேகமே.

கடந்த காலங்களில் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்ட தமிழ் மக்கள் மீதான எந்தப் படுகொலைக்கும், எந்தப் பாலியல் வன்புணர்வுப் படுகொலைக்கும் சிங்கள நீதித்துறை நீதி வழங்கிய வரலாறே கிடையாது.

குற்றவாளி சிங்களவனாகவும், பாதிக்கப்பட்டவன் தமிழனாகவும் இருக்கும் பட்சத்தில் சிங்கள தேசத்தின் நீதிதேவதை விடுமுறையில் சென்றுவிடும். இதுவே இலங்கைத் தீவின் நீதியியல் வரலாறாகும். 

1983-ம் ஆண்டு கறுப்பு ஜுலை இனப் படுகொலைகளுக்குப் பின்னர் கொழும்பில் பகிரங்கமாக அரங்கேற்றப்பட்ட முதலாவது தமிழினப் படுகொலையாகும். எண்ணற்ற தமிழர்கள் காரணமற்ற வகையில் படுகொலை செய்யப்பட்டு, வீதிகளிலும், வாவிகளிலும் வீசப்பட்ட, சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்கள் அத்தனையையும் நியாயப்படுத்த சிங்கள தேசம் விடுதலைப் புலிகள் என்ற முகவரியைக் கொடுத்து நியாயம் கற்பித்து வந்தது.

தமிழீழ மண்ணில் முள்ளிவாய்க்கால் வரையும், அதன் பின்னரும் நிகழ்த்தி முடிக்கப்பட்ட அத்தனை படுகொலைகளும் யுத்த பின்னணியில் நீதி கோர முடியாமலேயே மூடி மறைக்கப்பட்டுவிட்டது. அதன் பின்னர் கொழும்பில் இந்தக் கொடூரம் பட்டப்பகலில், பலரும் பார்த்திருக்க நிகழ்த்தி முடிக்கப்பட்டுள்ளது. 

முள்ளிவாய்க்கால் வரை விடுதலைப் புலிகளின் பலம் சிங்கள தேசத்தை அச்சுறுத்தியதனால், அவர்களால் 1983 ற்குப் பின்னர் இத்தகைய எந்தவொரு கொடூரத்தையும் அரங்கேற்ற முடிந்திருக்கவில்லை.

தமிழ் மக்களது பலம் சிதைக்கப்பட்டு, தற்போது தமிழர்கள் மீண்டும் அடிமைப்படுத்தப்பட்ட சூழலில் மீண்டும் இனப் படுகொலைகள் தெற்கிலும் தலைதூக்க ஆரம்பித்து விட்டது என்ற செய்தி இதன் மூலம் தென் பகுதியில் வாழும் தமிழர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

முன்பெல்லாம் தெற்கில் வாழும் தமிழர்கள் சிங்கள இனத்தின் வன்முறைகளுக்கு உட்படுத்தப்படும் போதெல்லாம், அவர்கள் தமது பாதுகாப்பிற்காக வடக்கை நோக்கியும், கிழக்கை நோக்கியும் அவர்களது தாயக பூமிக்கு சிங்கள அரசுகள் அனுப்பி வைப்பதுண்டு.

தற்போது, தமிழர்கள் பிரதேசங்கள் முழுவதும் சிங்கள இராணுவத்தால் தமிழர்களின் பாதுகாப்பு அங்கும் கேள்விக் குறியாகவே உள்ளது. இலங்கைத் தீவு முழுவதும் போக்கிடமற்ற, பாதுகாப்பற்ற நிலையில் அடிமைப்படுத்தப்பட்ட தமிழர்களது எதிர்காலம் சிங்கள இனவாதிகளின் விருப்பத்தைப் பொறுத்ததாகவே இருக்கப் போகின்றது.

இதைத் தொடர அனுமதிக்கப் போகின்றோமா? அல்லது எதிர்த்துப் போராடப் போகின்றோமா? என்ற எமது தீர்மானத்திலேயே தமிழ் மக்களின் எதிர்காலம் தங்கியுள்ளது.
 


செய்திகள்: இந்தியா, தமிழகம், வணிகம், வீடியோ, கட்டுரைகள், நேர்காணல்

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது! - வைகோ கண்டனம்!
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:02.33 PM ]
தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான். [மேலும்]
சுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலும்: சோக பூமியில் துரோக அரசியல்
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 03:37.01 PM ]
ஈழத்தில் இரக்கமற்ற இரத்தக் கொடுமையை அதிபர் மகிந்த ராஜபக்ஷ நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தவின் அரசியல் ஆளுமை காரணமா பொன்சேகாவின் இராணுவ வலிமை முக்கியமா என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்! இவ்வாறு தமிழத்திலிருந்து வெளிவரும் வார இதழான ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது [மேலும்]
சரணடைந்த புலி உறுப்பினர்கள் பலரின் நிலை என்ன?: ஜோன் ஹோம்ஸிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கேள்வி
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 12:47.40 PM ]
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் உதவி மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர்  ஜோன் ஹோம்ஸை சந்தித்துள்ளனர். இதன் போது படையினரிடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட 20 ஆயிரம் புலி உறுப்பினர்களின் நிலைமை என்னவென தமிழ் கூட்டமைப்பினர் ஹோம்ஸிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். [மேலும்]
பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி: ஜெயலலிதா
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:49.54 AM ]
இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கடந்த 17ஆம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையை விமர்சித்து, பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்]
தமிழ் கூட்டமைப்பு பா.உ. சிவநாதன் கிசோர்,ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பு
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:33.25 AM ] []
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். [மேலும்]
தமிழர்களின் தன்னுரிமையினை ஏற்றுக் கொள்ளாத சர்வதேசத்தின் இரட்டை நிலைப்பாடு உணர்த்தி நிற்கும் தேசியத் தலைமையின் இருப்பின் அவசியம்
[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 03:45.04 PM ]
தலைவன் பிறந்ததனாலும், விடுதலை பயணதத்தில் முதல் வித்து வீழ்ந்ததனாலும் கார்த்திகையே பெருமையடைந்தது. ஈழத்தமிழர்கள் வாழ்க்கையில் மாத்திரமன்றி உலகத் தமிழர்களையும் தாண்டி உலக வல்லரசு நாடுகளை பொறுத்த வரையிலும் அதிக எதிர்பார்ப்பிற்கு உரியதாகவும் முக்கியத்துவம் மிக்கதுமாக ஒவ்வொரு கார்த்திகை மாதமும் அமைந்திருந்தது எவ்வளவிற்கு எவ்வளவு உண்மையோ அவ்வளவிற்கு அவ்வளவு ஏன் அதனைவிட அதிகமாக எதிர்பார்ப்பும் முக்கியத்துவமும் வாய்ந்ததாக அமைந்துள்ளது இந்த கார்த்திகை மாதம். [மேலும்]
விளம்பரம்