கைகூப்பி உயிர் பிச்சை கேட்டவரை அடித்து கொலை செய்த அராஜகத்திற்கு எதிராக 4ம் திகதி கண்டன ஆர்ப்பாட்டம்: மனோகணேசன் எம்பி அழைப்பு (வீடியோ இணைப்பு)
[ சனிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2009, 08:55.09 AM GMT +05:30 ]
கொழும்பு பம்பலப்பிட்டியில் மனநிலை பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் சிவகுமாரனை பல நூறு பேர் பார்த்திருக்க, பட்டப்பகலில் அடித்து கடலில் தள்ளி கொலை செய்த காட்டுமிராண்டி அராஜகத்திற்கு எதிரான சாத்வீக கண்டன ஆர்ப்பாட்டத்தை எதிர்வரும் 4ம் திகதி புதன்கிழமை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் நடத்துவதற்கு ஜனநாயக மக்கள் முன்னணி முடிவு செய்துள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல், இன, மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக நிறுவனங்களும், மனித உரிமை அமைப்புகளும் கலந்துகொள்ள வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மனோ எம்பி மேலும் தெரிவித்துள்ளதாவது,
இந்நாட்டிலே இன்று இத்தகைய காட்டுமிராண்டி கலாசாரம் வேகமாக வளர்த்து வருகின்றது. இந்த கொலை சம்பவத்தில் சட்டத்தையும், ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய பொலிஸ் அதிகாரி ஒருவரே முன்னின்று இத்தகைய பாவ காரியத்தை செய்து முடித்திருப்பதை கண்டு முழு நாடுமே தலைகுனிய வேண்டியுள்ளது.
கையெடுத்து வணங்கி உயிர் பிச்சை கேட்ட 26 வயது இளைஞரை அடித்து கடலில் தள்ளிய காட்சியை தொலைக்காட்சிகளில் செய்திப்படமாக பார்த்து அகில இலங்கையும் அதிர்ச்சியடைந்துள்ளது.
இந்த சம்பவத்தின் காரணமாக கைது இடம்பெற்று இருந்தாலும், இத்தகைய அராஜகப் போக்கை நாம் கண்டிக்காமல் அமைதியாக இருப்போமானால், இது தொடர்கதையாக மாறிவிடும். ஏற்கனவே அங்குலான பகுதியில் இரு இளைஞர்கள் பொலிஸ் அராஜகத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை நாம் மறக்கமுடியாது.
எனவே அனைத்து தரப்பினரும் தங்களது வழமையான கடமைகளை ஒத்திவைத்துவிட்டு எதிர்வரும் புதன்கிழமை 4ம் திகதி பகல் 12.00 மணிக்கு கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஒன்றுக்கூடி எமது சாத்வீக எதிர்ப்பை தெரிவிக்கவேண்டும்.
மேல்மாகாணசபை உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தலைமையிலான முஸ்லிம் உரிமைகள் இயக்கம் உட்பட பல்வேறு அமைப்பினர் தமது ஒத்துழைப்பை இந்த அராஜகத்திற்கு எதிரான நமது ஆர்ப்பாட்டத்திற்கு வழங்குவதற்கு உறுதியளித்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும், மாகாணசபை உறுப்பினருமான எஸ்.இராஜேந்திரன் தெரிவித்தார்.
தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான். [மேலும்]
ஈழத்தில் இரக்கமற்ற இரத்தக் கொடுமையை அதிபர் மகிந்த ராஜபக்ஷ நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தவின் அரசியல் ஆளுமை காரணமா பொன்சேகாவின் இராணுவ வலிமை முக்கியமா என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்! இவ்வாறு தமிழத்திலிருந்து வெளிவரும் வார இதழான ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது [மேலும்]
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் உதவி மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர் ஜோன் ஹோம்ஸை சந்தித்துள்ளனர். இதன் போது படையினரிடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட 20 ஆயிரம் புலி உறுப்பினர்களின் நிலைமை என்னவென தமிழ் கூட்டமைப்பினர் ஹோம்ஸிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். [மேலும்]
இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கடந்த 17ஆம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையை விமர்சித்து, பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்]
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். [மேலும்]
தலைவன் பிறந்ததனாலும், விடுதலை பயணதத்தில் முதல் வித்து வீழ்ந்ததனாலும் கார்த்திகையே பெருமையடைந்தது. ஈழத்தமிழர்கள் வாழ்க்கையில் மாத்திரமன்றி உலகத் தமிழர்களையும் தாண்டி உலக வல்லரசு நாடுகளை பொறுத்த வரையிலும் அதிக எதிர்பார்ப்பிற்கு உரியதாகவும் முக்கியத்துவம் மிக்கதுமாக ஒவ்வொரு கார்த்திகை மாதமும் அமைந்திருந்தது எவ்வளவிற்கு எவ்வளவு உண்மையோ அவ்வளவிற்கு அவ்வளவு ஏன் அதனைவிட அதிகமாக எதிர்பார்ப்பும் முக்கியத்துவமும் வாய்ந்ததாக அமைந்துள்ளது இந்த கார்த்திகை மாதம். [மேலும்]