One moment please..
 
செய்தி
3வது நாளாகவும் தொடரும் கனடியத் தமிழரின் உறுதிப்போராட்டம். மூவர் உண்ணாவிரதம்
[ வியாழக்கிழமை, 09 ஏப்ரல் 2009, 11:22.47 AM GMT +05:30 ]
கனடியத் தமிழ் மாணவர் சமூகம், கனடியத் தமிழர் நமூகம் ஆகியவற்றினால் கனடியத் தலைநகரான ஒட்டாவாவில் உள்ள நாடாளுமன்ற முன்றலில் நடத்தப்படும் உறுதிப் போராட்டம் இன்று வியாழக்கிழமை மூன்றாவது நாளாக தன்னெழுச்சியுடனும், உணர்வு பூர்வமாகவும் இடம்பெற்று வருகின்றது.

கடந்த 7ம் திகதி ஆரம்பமான இந்தப் போராட்டம், 48 மணித்தியாலங்களைக் கடந்துவிட்ட வேளையிலும், அனைத்து மக்களும் ஒன்றுபட்ட ஒரே குரலில் ஒட்டாவா நகரில் திரண்டு புதிய களங்களை விரிவுபடுத்தி வருகின்றனர்.  நகரின் பிரதான ஜந்து வீதிகளை கடந்த இரண்டு தினங்களாக முற்றாக முற்றுகை இடப்பட்டு, வாகனப் போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டன. கனடிய மற்றும் தமிழீழத் தேசியக் கொடிகளை ஆயிரக் கணக்கில் தமிழர்கள் தாங்கியவாறு, வீதிகளில் நின்று சிறிலங்கா இனப்படுகொலைகளை விபரிக்கும் ஆங்கிலப் பிரசுரங்களை விநியோகித்து வருகின்றனர்


கனடியப் பிரசைகளும், பல வேற்றின மக்களும் இப்பிரசுரங்களை வாசித்த பின்னர் தாமும் இந்தப் போராட்டத்தில் பங்குபற்றி அனைவரையும் உற்சாகப்படுத்திய நிகழவுகள் இரண்டாம் நாள் இடம்பெற்றது.


பல்வேறு பல்கலைக்கழகங்களின் வேற்றின மாணவர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இதில் பங்குபற்றி உரையாற்றி உற்சாகம் வழங்கி வருகின்றனர். கனடியப் பொலிசார் இந்தப் பேரெழுச்சியுடன் கூடிய உறுதிப்போராட்டத்துக்கு தம்மாலான ஒத்துழைப்பு வழங்கி, சட்டம் ஒழுங்கை பேணிவருவது குறிப்பிடத்தக்கது.

ஒட்டாவா, மொன்றியல் வாழ் தமிழ் மக்களும், ரொறன்ரோ பெரும்பாகத் தமிழ் மக்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். ரொறன்ரோவிலுருந்து தினமும் காலை,மாலை என்று பேருந்துகள் விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்டு மக்களை ஏற்றிச்செல்கின்றன.

எட்டாம் திகதியான இரண்டாம் நாள் மூன்று தமழ் மூத்தோர் இங்கு தங்களின் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தனர். இவர்களுக்கு ஆதரவாக மேலும் பலர் சுழற்சி முறையில் இணைந்துள்ளனர். மழை, வெய்யில், பனி, குளிர் என்று அடிக்கடி மாறிவரும் காலநிலையையும் பொருட்படுத்தாது, இரவு-பகல் என்றும் பாராமல் ஆயிரக்கணக்கானவர்கள் நாடாளுமன்ற முகப்பில் கூடாரம் அடித்துத் தங்கியுள்ளனர்.

வன்னிக் களநிலவரம் சம்பந்தமான உடனடிச்செய்திகள் விசேட ஒலிபரப்பு வசதிகள் ஊடாக ஒலிபரப்பப்பட்டு வருகின்றது.  கனடாவின் சகல ஆங்கிலப் பத்திரிககளும், தொலைக்காட்சிச் சேவைகளும் இந்தப் போராட்டத்துக்கு முக்கிய இடமளித்து வருவதைக் கவனிக்கக் கூடியதாகவுள்ளது. அடுத்துவரும் நான்கு நாட்களான 10ம் திகதி முதல் 13ம் திகதி வரை அரசாங்க விடுமுறை நாட்களாதலால், பல்லாயிரக்கணக்கான மக்கள் இதில் பங்கேற்பர் என்று எதிர்பாக்கப்படுகின்றது.


செய்திகள்: இந்தியா, தமிழகம், வணிகம், வீடியோ, கட்டுரைகள், நேர்காணல்

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது! - வைகோ கண்டனம்!
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:02.33 PM ]
தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான். [மேலும்]
சுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலும்: சோக பூமியில் துரோக அரசியல்
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 03:37.01 PM ]
ஈழத்தில் இரக்கமற்ற இரத்தக் கொடுமையை அதிபர் மகிந்த ராஜபக்ஷ நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தவின் அரசியல் ஆளுமை காரணமா பொன்சேகாவின் இராணுவ வலிமை முக்கியமா என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்! இவ்வாறு தமிழத்திலிருந்து வெளிவரும் வார இதழான ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது [மேலும்]
சரணடைந்த புலி உறுப்பினர்கள் பலரின் நிலை என்ன?: ஜோன் ஹோம்ஸிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கேள்வி
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 12:47.40 PM ]
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் உதவி மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர்  ஜோன் ஹோம்ஸை சந்தித்துள்ளனர். இதன் போது படையினரிடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட 20 ஆயிரம் புலி உறுப்பினர்களின் நிலைமை என்னவென தமிழ் கூட்டமைப்பினர் ஹோம்ஸிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். [மேலும்]
பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி: ஜெயலலிதா
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:49.54 AM ]
இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கடந்த 17ஆம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையை விமர்சித்து, பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்]
தமிழ் கூட்டமைப்பு பா.உ. சிவநாதன் கிசோர்,ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பு
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:33.25 AM ] []
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். [மேலும்]
தமிழர்களின் தன்னுரிமையினை ஏற்றுக் கொள்ளாத சர்வதேசத்தின் இரட்டை நிலைப்பாடு உணர்த்தி நிற்கும் தேசியத் தலைமையின் இருப்பின் அவசியம்
[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 03:45.04 PM ]
தலைவன் பிறந்ததனாலும், விடுதலை பயணதத்தில் முதல் வித்து வீழ்ந்ததனாலும் கார்த்திகையே பெருமையடைந்தது. ஈழத்தமிழர்கள் வாழ்க்கையில் மாத்திரமன்றி உலகத் தமிழர்களையும் தாண்டி உலக வல்லரசு நாடுகளை பொறுத்த வரையிலும் அதிக எதிர்பார்ப்பிற்கு உரியதாகவும் முக்கியத்துவம் மிக்கதுமாக ஒவ்வொரு கார்த்திகை மாதமும் அமைந்திருந்தது எவ்வளவிற்கு எவ்வளவு உண்மையோ அவ்வளவிற்கு அவ்வளவு ஏன் அதனைவிட அதிகமாக எதிர்பார்ப்பும் முக்கியத்துவமும் வாய்ந்ததாக அமைந்துள்ளது இந்த கார்த்திகை மாதம். [மேலும்]
விளம்பரம்