|
| பிரித்தானிய இராணுவப் பொலிசார் அராஜகம் சிறுவர் குழந்தைகள் தூக்கி எறியப்பட்டனர் |
| [ செவ்வாய்க்கிழமை, 07 ஏப்ரல் 2009, 08:30.28 AM GMT +05:30 ] | |
பாராளுமன்றம் முன்பாக அமைதியாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழர்கள் மீது போலீசார் அராஜகம் சிறுவர் குழந்தைகள் அனைவரும் தூக்கி எறியப்பட்டனர் |
(வீடியோ பார்ப்பதற்கு (VIDEO) வீடியோ என்ற படத்தின் மேல் அழுத்தவும்)
பிரித்தானியா வாழ் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள், உடனே அணிதிரளுங்கள் பாராளுமன்றம் நோக்கி !!! எமது சிறுவர்கள் குழந்தைகள் , முதியோர் என பாராமல், பிரித்தானிய இராணுவ பொலீசார், இன்று காலை எமது தமிழ் உறவுகளை தூக்கி எறிந்து காயப்படுத்தியுள்ளனர்.
அமைதியாக சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எமது உறவுகளை பலவந்தமாக தூக்கி எறிந்து அப்புறப்படுத்தியுள்ளது பிரித்தானிய பொலீஸ். எமது உறவுகளே உடனே உங்கள் வேலை அனைத்தையும் நிறுத்திவிட்டு பாராளுமன்றம் முன்பாக கூடவும்.
எமது பல உறவுகள் காயமடைந்துள்ள நிலையில் அங்கு தொடர்ந்தும் போராடிவருகின்றனர் அவர்களை நாம் கைவிடக்கூடாது. தோள்கொடுப்போம் , ஆகையால் விரைந்து வாருங்கள் உறவுகளே . இன்று மழை பெய்யும் சாத்தியம் இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளதனால், அதற்கும் ஆயத்தமாக வாருங்கள்,
தொடர்ந்தும் அமைதிவழியில் எமது போராட்டத்தை முன்னெடுப்போம் ! அனைத்து பிரித்தானிய தமிழ் உறவுகளும் வந்து கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.
யேர்மனி, பிரான்ஸ், சுவிசிஸ், நோர்வே, கனடா, பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு மக்களுக்கு அழைப்பு





|
|
|
|
|
| காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது! - வைகோ கண்டனம்! |
| [ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:02.33 PM ] |
தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான். [மேலும்] |
| சுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலும்: சோக பூமியில் துரோக அரசியல் |
| [ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 03:37.01 PM ] |
ஈழத்தில் இரக்கமற்ற இரத்தக் கொடுமையை அதிபர் மகிந்த ராஜபக்ஷ நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தவின் அரசியல் ஆளுமை காரணமா பொன்சேகாவின் இராணுவ வலிமை முக்கியமா என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்! இவ்வாறு தமிழத்திலிருந்து வெளிவரும் வார இதழான ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது [மேலும்] |
| சரணடைந்த புலி உறுப்பினர்கள் பலரின் நிலை என்ன?: ஜோன் ஹோம்ஸிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கேள்வி |
| [ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 12:47.40 PM ] |
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் உதவி மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர் ஜோன் ஹோம்ஸை சந்தித்துள்ளனர். இதன் போது படையினரிடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட 20 ஆயிரம் புலி உறுப்பினர்களின் நிலைமை என்னவென தமிழ் கூட்டமைப்பினர் ஹோம்ஸிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். [மேலும்] |
| பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி: ஜெயலலிதா |
| [ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:49.54 AM ] |
இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கடந்த 17ஆம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையை விமர்சித்து, பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்] |
| தமிழ் கூட்டமைப்பு பா.உ. சிவநாதன் கிசோர்,ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பு |
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:33.25 AM ] [ ] |
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். [மேலும்] |
|