|
|
|
|
| முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் மீண்டும் அகோர எறிகணைத் தாக்குதல்: 47 பொதுமக்கள் பலி; 56 பேர் காயம் |
| [ செவ்வாய்க்கிழமை, 12 மே 2009, 04:54.10 AM GMT +05:30 ] | |
முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள தற்காலிக மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் மீண்டும் இன்று காலை நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் 47 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 56 பேர் காயமடைந்தும் உள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். |
(வீடியோ பார்ப்பதற்கு VIDEO என்ற படத்தின் மேல் அழுத்தவும்)
பாதுகாப்பு வலய'மான முள்ளிவாய்க்காலில் தற்காலிகமாக இயங்கிவந்த முல்லைத்தீவு பொதுமருத்துவமனை மீது இன்று செவ்வாய்க்கிழமை காலை 8:00 மணியளவில் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களை அகோரமாக நடத்தியதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக விடுதலைப்புலிகளின் பேச்சாளர் புலித்தேவன் கூறுகையில், முள்ளிவாய்க்காலில் உள்ள தற்காலிக மருத்துவமனையில் சிறிலங்காப் படையினர் இன்று காலை நடத்திய தாக்குதலில் 47 பேர் உயிரிழந்துள்ளனர் என்றார்.
அத்துடன் அப்பகுதி சுகாதாரத்துறை அதிகாரியை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்ட போது, இன்றைய தாக்குதலில் 56 பேர் காயமடைந்ததாக கூறினார்.
தாக்குதலில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சண்முகராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் மயிரிழையில் உயிர் தப்பினர். எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில், முள்ளிவாய்க்கால் தற்காலிக மருத்துவமனையின் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தவில்லை என சிறிலங்க அரசு மறுத்துள்ளது.
கடந்த மே மாதம் 2 ஆம் நாளில் இந்த மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் நோயாளர்கள் உட்பட 64 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 87 பேர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.









|
|
|
|
|
| காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது! - வைகோ கண்டனம்! |
| [ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:02.33 PM ] |
தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான். [மேலும்] |
| சுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலும்: சோக பூமியில் துரோக அரசியல் |
| [ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 03:37.01 PM ] |
ஈழத்தில் இரக்கமற்ற இரத்தக் கொடுமையை அதிபர் மகிந்த ராஜபக்ஷ நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தவின் அரசியல் ஆளுமை காரணமா பொன்சேகாவின் இராணுவ வலிமை முக்கியமா என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்! இவ்வாறு தமிழத்திலிருந்து வெளிவரும் வார இதழான ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது [மேலும்] |
| சரணடைந்த புலி உறுப்பினர்கள் பலரின் நிலை என்ன?: ஜோன் ஹோம்ஸிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கேள்வி |
| [ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 12:47.40 PM ] |
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் உதவி மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர் ஜோன் ஹோம்ஸை சந்தித்துள்ளனர். இதன் போது படையினரிடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட 20 ஆயிரம் புலி உறுப்பினர்களின் நிலைமை என்னவென தமிழ் கூட்டமைப்பினர் ஹோம்ஸிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். [மேலும்] |
| பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி: ஜெயலலிதா |
| [ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:49.54 AM ] |
இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கடந்த 17ஆம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையை விமர்சித்து, பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்] |
| தமிழ் கூட்டமைப்பு பா.உ. சிவநாதன் கிசோர்,ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பு |
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:33.25 AM ] [ ] |
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|