|
| கனரக ஆயுத தவிர்ப்பு காலத்தில் படையினரால் மக்கள் பாதுகாப்பு வலயம் மீது 5600 எறிகணைகள் ஏவப்பட்டுள்ளன: 200 பொதுமக்கள் கொலை; 1000 ற்கு அதிகமானோர் காயம் |
| [ செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2009, 02:50.39 PM GMT +05:30 ] | |
கனரக ஆயுத தவிர்ப்பு நடைமுறையில் உள்ள நிலையில் நேற்று திங்கட்கிழமை மாலை 6 மணி முதல் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிவரையிலான 17 மணி நேர காலப்பகுதியில், சிறிலங்காப் படையினரால் முள்ளிவாய்க்கால் உட்பட்ட மக்கள் பாதுகாப்பு வலய பிரதேசங்கள் மீது 5600 எறிகணைகள் ஏவப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப்புலிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
|
(வீடியோ பார்ப்பதற்கு (VIDEO) வீடியோ என்ற படத்தின் மேல் அழுத்தவும்)
இந்தக 17 மணிநேர காலப்பகுதியில் சிறிலங்கா படையினரால் 2600 பல்குழல் பீரங்கி குண்டுகள், 1000 ஆட்லறி எறிகணைகள், மற்றும் 2000 மோட்டார் குண்டுகள் என்பன பொதுமக்கள் செறிவாக வாழும் பாதுகாப்பு வலய வாழ்விடங்களை நோக்கி ஏவப்பட்டுள்ளன.
முள்ளிவாய்க்கால், தாழம்பன்,ஓட்டைப்பானையடி மற்றும் இரட்டை வாய்க்கால் ஆகிய இடங்களில் உள்ள பொதுமக்கள் மீதே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதன்போது சுமார் 200 க்கு மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மூன்று மருத்துவ நிலையங்களில் சிகிச்சை பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சிறிலங்கா வான்படையின் குண்டுவீச்சு விமானங்களும் இரட்டை வாய்க்கால், ஓட்டைப்பானையடி பகுதிகளில் தடைசெய்யப்பட்ட கிளஸ்ரர் குண்டுகளை வீசியுள்ளதாக விடுதலைப்புலிகள் உத்தியோகபூர்வமாக தகவல் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் காயமடைந்தவர்களுக்கு திலீபன் மருத்துவ மையங்கள், மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளின் மருத்துவ நிலையங்கள், முதலுதவி நிலையங்கள், முள்ளிவாய்க்கால் மருத்துவமனை, முல்லை, கிளி. மாவட்ட சுகாதார பிராந்திய சேவை நிலையங்கள் போன்றவற்றில் கடந்த 3 நாட்களில் மாத்திரம் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.
எறிகணை வீச்சுகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதால் உயிர்சேதங்கள் தொடர்பான உண்மை தகவல்களை பெறமுடியவில்லை.













|
|
|
|
|
| காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது! - வைகோ கண்டனம்! |
| [ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:02.33 PM ] |
தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான். [மேலும்] |
| சுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலும்: சோக பூமியில் துரோக அரசியல் |
| [ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 03:37.01 PM ] |
ஈழத்தில் இரக்கமற்ற இரத்தக் கொடுமையை அதிபர் மகிந்த ராஜபக்ஷ நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தவின் அரசியல் ஆளுமை காரணமா பொன்சேகாவின் இராணுவ வலிமை முக்கியமா என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்! இவ்வாறு தமிழத்திலிருந்து வெளிவரும் வார இதழான ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது [மேலும்] |
| சரணடைந்த புலி உறுப்பினர்கள் பலரின் நிலை என்ன?: ஜோன் ஹோம்ஸிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கேள்வி |
| [ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 12:47.40 PM ] |
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் உதவி மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர் ஜோன் ஹோம்ஸை சந்தித்துள்ளனர். இதன் போது படையினரிடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட 20 ஆயிரம் புலி உறுப்பினர்களின் நிலைமை என்னவென தமிழ் கூட்டமைப்பினர் ஹோம்ஸிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். [மேலும்] |
| பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி: ஜெயலலிதா |
| [ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:49.54 AM ] |
இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கடந்த 17ஆம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையை விமர்சித்து, பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்] |
| தமிழ் கூட்டமைப்பு பா.உ. சிவநாதன் கிசோர்,ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பு |
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:33.25 AM ] [ ] |
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். [மேலும்] |
|