|
|
|
|
| இலங்கை மோதலை கண்டித்து லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டம்; ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பெருந்திரளான மக்கள் பங்கேற்பு |
| [ சனிக்கிழமை, 31 சனவரி 2009, 12:27.25 PM GMT +05:30 ] | |
இலங்கையில் சிங்களப் பேரினவாதத்தின் தமிழினப் படுகொலையை நிறுத்தக் கோரியும் மரணத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் வன்னி மக்களை காக்குமாறும் பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் இன்று மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். |
சிறிலங்கா படையினரால் வன்னியில் தமிழ் மக்கள் இன அழிப்பு செய்யப்படுவதனைக் கண்டித்து லண்டனில் இன்று மாபெரும் எழுச்சிப் பேரணி தற்போது நடைபெறுகின்றது. இப்பேரணியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் திரண்டு வந்து தமது எழுச்சியை வெளிப்படுத்திய வண்ணம் உள்ளனர். லண்டன் மில் பாங்க் (MILL BANK ) எனும் இடத்தில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 1:00 மணியளவில் தொடங்கிய இந்த மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி நாடாளுமன்ற சுற்று வட்டம் ஊடாக ரெம்பிள் பிளேஸை (TEMPLE PLACE) நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.
தமிழ் இன அழிப்பை மேற்கொள்ளும் சிறிலங்கா அரசாங்கத்தை கடுமையாகக் கண்டித்தும் அனைத்துலக சமூகத்தின் பாராமுகத்தைக் கண்டித்தும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர். அத்துடன் சிறிலங்கா அரசுக்கு எதிராகவும் அனைத்துலக சமூகத்தின் பாராமுகத்தை கண்டிக்கும் வகையிலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பதாகைகளை ஏந்திய வண்ணம் உள்ளனர்.
"சிறிலங்கா அரசே தமிழின அழிப்பை நிறுத்து" "எங்களுக்கு தமிழீழமே வேண்டும்" "தமிழகத்தின் உணர்வுகளை சிறிலங்கா அரசே கொச்சைப்படுத்தாதே" "உடனடியாக போரை நிறுத்த வேண்டும்" "ஜி.எஸ்பி. சலுகை என்பது நீண்டகால அபிவிருத்திக்கே அன்றி தமிழின இன அழிப்பிற்கு அல்ல" "இந்திய அரசே தமிழ் மக்களின் உணர்வை மதி" "சிறிலங்கா அரசே தமிழ் இன அழிப்பை உடன் நிறுத்து" "ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலை நிறுத்து" "பி.பி.சியே தமிழ் மக்கள் அழிவை கவனத்தில் கொள்" "பாடசாலைகளிலும் மருத்துவமனைகளிலும் கோயில்களிலும் குண்டு வீசுவதை நிறுத்து"
உள்ளிட்ட பல முழக்கங்கள் அடங்கிய பதாகைகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஏந்தியிருந்தனர். அத்துடன், சிறிலங்கா இராணுவத்தின் படுகொலைகளை கண்டிக்கும் வகையில் படங்கள் அடங்கிய ஊர்திகளும் வர்ணச் சித்திரங்களையும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் தாங்கியிருந்ததுடன் தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்த "வீரத் தமிழ் மகன்" முத்துக்குமாரின் படம் தாங்கிய பதாகைகளையும் அமெரிக்க-பிரித்தானிய-ஜப்பானிய தலைவர்களின் வாய்கள் மௌனமாக்கப்பட்டுள்ளதை சித்தரிக்கும் பதாகைகளையும் சிறிலங்கா வான்படையின் போர் வானூர்திகள் மக்களை பலியெடுப்பது போன்ற பதாகைகளையும் மகிந்த ராஜபக்ச - கோத்தபாய ராஜபக்ச - சரத் பொன்சேகா ஆகியோரை படுகொலையாளிகளாக சித்தரிக்கும் பதாகைகளையும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் தாங்கியிருந்தனர்.
அத்துடன், நீதியின் திலகமாக விளங்கும் இந்தியாவின் மகாத்மா காந்தி அவர்கள் பிறந்த இந்திய தேசமே சிறிலங்காவின் தென்பகுதியில் இருந்து கொண்டு தமிழின அழிப்பை மேற்கொள்வதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முழக்கமிட்டதுடன் அதனை பிரதிபலிக்கும் வகையில் காந்தியின் படத்தை தாங்கிய வாசக அட்டைகளையும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் தாங்கியிருந்தனர். இப்பேரணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் உட்பட மேலும் பல அரசியல்வாதிகளும் கலந்து கொண்டனர்.
இந்த மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணிக்கு லண்டனில் பல்வேறு பாகங்களில் இருந்தும் வருகை தரும் மக்கள் தொடர்ச்சியாக குவிந்து கொண்டிருப்பதால் பேரணி நடைபெறும் வீதி மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்து கொண்டிருப்பதால் அங்கு போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த ஊர்வலம் வந்த பாதையில் பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு அருகே, தமிழ் இளைஞர்களால், இதே காரணத்துக்காக சுழற்சி முறை உண்ணாவிரதம் ஒன்றும் நடத்தப்படுகிறது.
இவ் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை வானிலிருந்து பிரித்தானிய உலங்குவானூர்தி பார்வையிட்டுக்கொண்டிருப்ப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதொன்றாகும்.
மேலதிக படத்தொகுப்புக்கள் உள்ளே


































|
|
|
|
|
| காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது! - வைகோ கண்டனம்! |
| [ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:02.33 PM ] |
தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான். [மேலும்] |
| சுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலும்: சோக பூமியில் துரோக அரசியல் |
| [ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 03:37.01 PM ] |
ஈழத்தில் இரக்கமற்ற இரத்தக் கொடுமையை அதிபர் மகிந்த ராஜபக்ஷ நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தவின் அரசியல் ஆளுமை காரணமா பொன்சேகாவின் இராணுவ வலிமை முக்கியமா என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்! இவ்வாறு தமிழத்திலிருந்து வெளிவரும் வார இதழான ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது [மேலும்] |
| சரணடைந்த புலி உறுப்பினர்கள் பலரின் நிலை என்ன?: ஜோன் ஹோம்ஸிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கேள்வி |
| [ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 12:47.40 PM ] |
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் உதவி மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர் ஜோன் ஹோம்ஸை சந்தித்துள்ளனர். இதன் போது படையினரிடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட 20 ஆயிரம் புலி உறுப்பினர்களின் நிலைமை என்னவென தமிழ் கூட்டமைப்பினர் ஹோம்ஸிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். [மேலும்] |
| பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி: ஜெயலலிதா |
| [ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:49.54 AM ] |
இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கடந்த 17ஆம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையை விமர்சித்து, பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்] |
| தமிழ் கூட்டமைப்பு பா.உ. சிவநாதன் கிசோர்,ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பு |
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:33.25 AM ] [ ] |
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|