|
|
|
| ராஜபக்ச-ரணில் இரகசிய உடன்பாட்டுக்குள் புதைந்துள்ள உண்மைகள் என்ன? |
| [ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 07:37.39 AM GMT +05:30 ] |
அரசியல் அமைப்புத்திருத்தம் சம்பந்தமாக ஜனாதிபதிக்கும் எதிர்க் கட்சித் தலைவருக்கிடையில் நடத்தப்பட்டுவரும் பேச்சு வார்த்தைகளில் இருவரும் மூன்று விடயங்கள் தொடர்பில் இரகசியமான இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரியவருகிறது. |
17ஆவது அரசியல் அமைப்புத்திருத்தம் குறித்து பேசுவதில்லை,ஜெனரல் சரத்தை பொன்சேகாவை விடுதலை செய்வது குறித்து பேசுவதில்லை. மற்றும் இரண்டு கட்சிகளின் உறுப்பினர்கள் கட்சி தாவ இடமளிப்பதில்லை எனவும் இரு தலைவர்களும் இரகசியமான இணக்கத்துக்கு வந்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டிருந்த நெருக்கடி எவ்வித பிரச்சினைகளும் இன்றி அண்மையில் முடிபுக்கு வந்தது. இதனை போலவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது இருப்பினை நீடித்துக் கொள்வதற்காக மேற் கொண்டு வரும் அரசியலமைப்புத் திருத்தங்களின் போது ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவு கிடைக்கும் என கூறப்படுகிறது.
அதேவேளை அரசாங்கத்திற்கு இருக்கும் மக்கள் ஆதரவு குறையும் முன்னர் அரசியலமைப்பு திட்டங்களை நாடாளுமன்றத்திற்கு சமர்பிக்க அரசாங்கம் எண்ணியுள்ளதாக தெரியவருகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடன் அரசியலமைப்புத்திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டாலும் சர்வஜன வாக்களிப்பு நடத்தப்பட்டால் அரசாங்கம் தொடர்பான அதிருப்தியை மக்கள் வெளியிடக் கூடும் என எதிர்க் கட்சியின் தலைவர்கள் சிலர் கருதுகின்றனர்.
ஜனாதிபதி இந்தியாவுக்கு வழங்கியுள்ள உறுதி மொழிக்கமைய புதிய அரசியலமைப் புத்திருத்தங்கள் மாகாண சபைகளுக்கு காணி, காவற்றுறை அதிகாரங்கள், நிதி அதிகாரங்கள் அதிகரித்தல் போன்றவையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதன் மூலம் விமர்சனங்களை முன்வைத்து வரும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவும் அரசாங்கத்துக்குக் கிடைக்கும் என கூறப்படுகிறது. |
|
|
|
| உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் மாநாடு சிறப்புற வாழ்த்துக்கின்றோம் |
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 10:13.19 PM ] [ ] |
உ.த.ப. இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற ஹம் ஸ்ரீகாமாக்ஷி அம்பாள் ஆலய ஆதீனகர்த்தா ஆறுமுக பாஸ்கரகுருக்கள், ஜேர்மனி அருட்திரு அந்தோனி பெர்னாண்டோ பெனற் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். [மேலும்] | | (2ம் இணைப்பு) |
| கிளிநொச்சி மாவட்ட பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கல்விமேம்பாட்டு உதவி நிதி கோரிக்கை |
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 08:37.04 PM ] [ ] |
உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் அகம் புலம் தமிழர் வாழ்வியல் மகானாடினை முன்னிட்டு உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியம் கிளிநொச்சி மாவட்ட அதிபர்கள் சங்கத்துடன் இணைந்து முன்னெடுக்கும்.. [மேலும்] |
| 18 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றம் |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:40.49 PM ] |
18 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் மூன்றில் இரண்டு அதிகாரத்துடன் சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. சீர்திருத்தத்திற்கு ஆதரவாக 161 வாக்குகளும் எதிராக 17 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. [மேலும்] |
| பாராளுமன்ற முன்றலில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டக் காட்சிகள் |
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 12:56.28 PM ] [ ] |
உத்தேச 18 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு ஆதரவளித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. [மேலும்] |
| புளொட்- புலிகள் மோதலும் அதனை வேடிக்கை பார்த்த இந்தியப் படையும்: உண்மையின் தரிசனம் (பாகம்-17) |
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 06:29.07 AM ] [ ] |
இந்திய இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இலங்கைக்கு மீண்டும் வந்த புளொட் அமைப்பு வடக்கு கிழக்கின் பல பகுதிகளிலும் முகாம்களை அமைத்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்தன. [மேலும்] |
|
|
| advertisement |
|
|