Switch to
   
   
   
செய்தி
(3ம் இணைப்பு)
லண்டனில் நடைபெற்ற இரவுநேர கவனயீர்ப்பு பேரணியும் - சிவந்தனின் ஐ.நா நோக்கிய நடைபயண ஆரம்பமும்
[ சனிக்கிழமை, 24 யூலை 2010, 07:55.26 AM GMT +05:30 ]
கறுப்பு ஜூலை இனப்படுகொலையின் இரத்த நாட்களை நினைவுகூர்ந்து லண்டனில் நேற்றைய தினம் இரவு நேர கவனயீர்ப்பு பேரணி ஒன்று பிரித்தானியா வாழ் தமிழ் மக்களால் நடாத்தப்பட்டது.

23-07-2010  வெள்ளிக்கிழமை இரவு 10:00 மணிக்கு ஆரம்பமான இந்த பேரணி 10:45 மணிக்கு பிரித்தானிய பிரதமரின் செயலகத்திற்கு முன்பாக சென்று நிறைவடைந்தது. 

இந்தப் பேரணியில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டிருந்தமையானது தமிழர்களின் போராட்டம் விடுதலை பெறும் வரை ஓய்வின்றி தொடரும் என்பதை வெளிப்படுத்துவதாகவும், தொடர்ச்சியான அவலங்களை சந்தித்த மக்களின் மனக்கொதிப்பினை வெளிக்கொண்டுவருவதாகவும் அமைந்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது. 

இந்தப் பேரணியில் கலந்துகொண்டிருந்த திரு.சிவந்தன் (கோபி) அவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த மக்களின் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தபடி லண்டனில் இருந்து ஜெனீவா வரையான தனது ஐ.நா நோக்கிய மனிதநேய நடைப்பயணத்தை ஆரம்பித்தார். 

இந்த இரவுநேர கவனயீர்ப்புப் பேரணியிலும், திரு.சிவந்தனின் ஐ.நா நோக்கிய மனிதநேய நடைப்பயணத்தின் ஆரம்ப நிகழ்விலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானிய பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டிருந்ததோடு திரு.சிவந்தனின் நடைப்பயணம் வெற்றிபெற வாழ்த்தினர். 

இந்த நிகழ்வில் பிரித்தானிய தமிழர் பேரவையை சேர்ந்த பல உறுப்பினர்களும், பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினரும் அதிகளவில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
திரு சிவந்தனின் நடைபயணம் ஆரம்பிப்பதற்கு முன் அங்கு கூடியிருந்த 2000 க்கும் அதிகமான மக்கள் மத்தியில் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பின் சார்பில்,

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதியான திரு. தயாபரன், பிரித்தானிய தமிழர் பேரவையின் பிரதிநிதி திரு. ஜெயா, அக்ற் நவ் அமைப்பின் பிரதிநிதியான திரு.ரிம் மார்ட்டின், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி திரு. ஜெயானந்தமூர்த்தி, மற்றும் திரு.சிவந்தன் ஆகியோர் உரையாற்றினர்.

லண்டனில் கறுப்பு ஜுலை இரவுநேரப் பேரணியில் 2,000 இற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு : சிவந்தனின் நடைபயணம் ஆரம்பித்தது

கறுப்பு ஜுலையை முன்னிட்டு பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற பேரணியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு தமது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

  • சிறீலங்கா அரசு மீது போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும்,
  • தடுப்பு முகாம்களிலுள்ள போராளிகள், பொதுமக்கள் விடுதலை செய்யப்பட்ட வேண்டும். முகாம்களிலுள்ளவர்களை பார்வையிட அனுமதிக்க வேண்டும்,
  • மனித உரிமைகளை மதிக்கும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பேரணி இடம்பெற்றது. பேரணியைத் தொடர்ந்து லண்டனில் இருந்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தனின் நடை பயணம் ஆரம்பித்துள்ளது.

முன்னதாக இரவு 10:00 மணியளவில் பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு அருகிலுள்ள ரொட்ஹில் (Tothill) வீதியில் இருந்து ஆரம்பித்த பேரணிஇ 10:45 அளவில் பிரித்தானியப் பிரதமரது இல்லமான இல.10 டவுணிங் ஸ்றீற்றை (Downing Street) சென்றடைந்தது.

அக வணக்கத்துடன் ஆரம்பித்த நிகழ்வில் பிரித்தானிய இளையோர் அமைப்பு, நாடு கடந்த தமிழீழ அரசு, அக்ட் நவ் (Act now), பிரித்தானிய தமிழர் பேரவை, தென் தமிழீழத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், நாடுகடந்த அரசாங்கத்தின் பிரதிநிதியுமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி, மற்றும் நடை பயணத்தை ஆரம்பித்துள்ள சிவந்தன் ஆகியோர் உரையாற்றியிருந்தனர்.

பேரணியில் கலந்து கொண்டோர் ஆரம்பத்தில் தமது கோரிக்கைகளை முன்வைத்து பாடல்களைப் பாடிச்சென்றனர். பின்னர் தமது உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாதவர்களால் இரவு நேரம் என்றும் பாராது சிறீலங்கா அரசுக்கு எதிராகக் கண்டனக் குரலெழுப்பிச் சென்றனர்.

கறுப்பு ஜுலை என்பதாலும், தமிழ் மக்களின் உள்ளக்கிடக்கைகளை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தவும் இரவு நேரம் இந்தப் போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்ட போதிலும், குழந்தைகளைத் தாங்கிய தாய்மார்இ சிறியவர்கள், பெரியோர் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

பேரணியில் கலந்துகொண்டவர்கள் மெழுகுதிரிகளையும், ஒளிவிளக்குகளையும், பாதாகைகளையும், பிரித்தானியா, மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கொடிகளை ஏந்திச் சென்றதுடன், தமது கோரிக்கைகளை அடங்கிய துண்டுப் பிரசுரங்களையும் பிரித்தானியா மற்றும் ஏனைய நாட்டு மக்களிற்கு வழங்கிச் சென்றனர்.

பேரணியைத் தொடர்ந்து நடைபெற்ற உரைகளையடுத்து ஐக்கிய நாடுகள் சபை நோக்கிய சிவந்தனின் நடை பயணம் ஆரம்பித்தது. ஜெயானந்தமூர்த்தி அவர்கள் இந்த நடை பயணத்தை ஆரம்பித்து வைத்திருந்த அதேவேளை, அங்கு கூடியிருந்த மக்கள் சிவந்தனுக்கு தனது வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

இவர் பிரித்தானியக் கடற்கரையான டோவரைச் சென்றடைந்து அங்கிருந்து பிரான்ஸின் கடற்கரையான கலையை அடைந்த பின்னர், அங்கிருந்து பரிஸ் நோக்கி நடந்து, பின்னர் ஜெனீவா நோக்கிச் செல்ல இருக்கின்றார்.

சிவந்தனுடன் பிரித்தானியா, பிரான்ஸ், சுவிற்சர்லாந்து உறவுகள் இணைந்து நடந்து செல்ல வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 6ஆம் திகதி ஈகப்பேரொளி முருகதாசன் திடலில் (ஐ.நா முன்றலில்) பிற்பகல் 2:00 மணியளவில் மாபெரும் எழுச்சிக் கவனயீர்ப்பும், மனுக் கையளிப்பு நிகழ்விலும் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும் எனவும் தமிழ் மக்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விபரங்களுக்கு இந்த நிகழ்வை ஒழுங்கு செய்துள்ள கீழுள்ள அமைப்புக்களைத் தொடர்புகொள்ளுமாறு மக்கள் அன்பாகக் கேட்கப்பட்டுள்ளனர்.

  • பிரித்தானிய தமிழர் பேரவை +44(0)20 8808 0465
  • தமிழ் இளையோர் அமைப்பு – பிரித்தானியா
  • ஐரோப்பிய தமிழர் ஒன்றியம்
  • தமிழீழ மக்கள் பேரவை – பிரான்ஸ் (+33 (0)6 11 72 59 78 ஃ +33 (0)6 25 90 85 93)
  • சுவிஸ் ஈழத்தமிழரவை (+41 (0) 79 309 06 69)
  • தமிழ் இளையோர் அமைப்பு – சுவிஸ்
  • இத்தாலி ஈழத்தமிழர் மக்களவை
  • டென்மார்க் தமிழர் பேரவை
  • நோர்வே ஈழத்தமிழர் அவை
  • தமிழீழ புரட்சிகர மாணவர்கள்

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
சித்திரவதைக்குள்ளான ஆரியவதிக்கு ஆவிப் பிரச்சினையாம்: சவூதி சென்ற குழுவினர் தகவல்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 09:28.06 AM ]
சவூதி அரேபியாவில் ஆணி அறையப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக கூறப்படும் ஆரியவதி தொடர்பில் தற்போது சவூதி அரேபியாவில் வேறு விதமான கருத்தே நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
கட்டுநாயக்கவில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இரு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் பலி
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 03:54.35 AM ]
கட்டுநாயக்க பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றில் இரண்டு உயர்தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த மோதல் சம்பவத்தில் மேலும் 25 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
வெள்ளையனை நோக்கி பூலித்தேவன் பாய்ந்தார்! சிங்களவனை நோக்கி பிரபாகரன் பாய்ந்தார்!: காசிஆனந்தன்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 03:20.19 AM ]
வெள்ளைக்காரனை எதிர்த்து பூலித்தேவன் பாய்ந்தார். அதே போல் தம்பி பிரபாகரன் சிங்களவனை எதிர்த்து பாய்ந்தார். சிங்களவனின் கொடுமை எத்தனை?எத்தனை? இவ்வாறு நெல்லை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற விடுதலைப்போராட்ட வீரர் பூலித்தேவனின் 295வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றுகையில் தெரிவித்தார். [மேலும்]
(2ம் இணைப்பு)
வெற்றிச்சரிதம் படைக்க ஜேர்மனியில் ஒன்றுதிரளட்டும் உலகத்தமிழினம் - வைகோ
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 11:27.27 AM ] []
நேற்றைய வரலாறு, இன்றைய அவலங்கள், நாளைய விடியல் இவை பற்றிச் சிந்திக்கவும், செயற்திட்டங்களை வகுக்கவும் வியூகங்கள் அமைக்கவும் வெற்றிச்சரிதம் படைக்கவும் ஜேர்மனியில் நடைபெறும் உ.த.ப.இயக்க ஐரோப்பிய ஒன்றியத்தினால் நடைபெறும் மாநாட்டுக்கு வைகோ விடுத்துள்ள வாழ்த்தறிக்கை. [மேலும்]
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள மாநாட்டு அறிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 11:03.36 AM ]
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள அகம் புலம் தமிழர் வாழ்வியல் மகாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மகாநாட்டு அமைப்பாளரும், ஐரோப்பிய ஒன்றியத்தலைவருமான துரை கணேசலிங்கம், மகாநாட்டு செயலாளருமான ப.பரமேஷ்வரன் ஆகியோர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள சிறப்பறிக்கை. [மேலும்]
தமிழின உயிர்கொலை நாள்- செப்டம்பர் 5 : கிழக்கு பல்கலைக்கழக அகதிமுகாம் படுகொலையின் 20ஆண்டு நினைவு நாள் இன்று - இரா.துரைரத்தினம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 12:24.36 PM ] []
ஓகஸ்ட் செப்டம்பர் மாதங்கள் கிழக்கு மாகாண மக்களைப் பொறுத்தவரை அவர்களின் வாழ்வில் மறக்க முடியாத துன்பங்களையும் இழப்புக்களையும் கொடுத்த மாதங்கள். 1990ஆம் ஆண்டு யூன் மாதம் விடுதலைப்புலிகளுக்கும் ஸ்ரீலங்கா படைகளுக்கும் இடையில் போர் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு அம்பாறை பிரதேசங்களை ஸ்ரீலங்கா படைகள்..... [மேலும்]
விளம்பரம்
advertisement