Switch to
   
   
   
செய்தி
பொய்யென நிரூபிக்க சிறிலங்கா அரசு பயன்படுத்திய வீடியோ போலியானது
[ ஞாயிற்றுக்கிழமை, 13 செப்ரெம்பர் 2009, 08:51.01 AM GMT +05:30 ]
ஓகஸ்டில் சனல் 4  தொலைக்காட்சி சேவை வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோ பொய்யானது என அரசு கூறுகிறது. அது பொய்யானது, சித்தரிக்கப்பட்டது என்றெல்லாம் கூறும் சிறிலங்கா அரசு அதை விஞ்ஞான ரீதியாக நிரூபித்துள்ளதாகவும் கூறுகிறது.

ஆனால் இவ்வாறு பொய்யென நிரூபிப்பதற்காக அரசு உண்மையான வீடியோவைப் பயன்படுத்தவில்லை.

அதாவது கைத்தொலைபேசியால் எடுக்கப்பட்ட வீடியோவைப் பயன்படுத்தாமல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டதைத் தாம் பதிவு செய்து அந்த வீடியோவையே பயன்படுத்தி தமது நிரூபித்தல்களைச் செய்துள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் இன அழிப்புக்கு எதிரான் தமிழர்கள் மேற்கொண்ட ஆய்விலிருந்தே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வை மேற்கொள்வதற்காக இன அழிப்புக்கு எதிரான அமைப்பு அமெரிக்க நிபுணர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது.

அமெரிக்க நிபுணர்கள் கொடுத்த ஆரம்பகட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய விடயங்களாவன,

ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு வெளியிட்ட வீடியோ .gp3 கோப்பாகும். ஆனால் சனல் 4 உட்பட அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களும் பயன்படுத்தியது வலை- ஒளிபரப்பு பதிவு என்னும் மாற்றப்பட்ட வடிவமாகும். அதாவது H263 (.gp3) வடிவத்திலிருந்து Flash-9, 10 இல் இயக்கக்கூடிய .avi வடிவமாக மாற்றப்பட்ட H264 வடிவத்தையே அரசு பயன்படுத்தியுள்ளது. ஒளி, ஒலி என்பவை சரியாக ஒத்திசையவில்லை என இலங்கையரசு சுட்டிக்காட்டியிருந்தது. இது இவ்வாறு வடிவம் மாற்றப்பட்ட வீடியோவைப் பயன்படுத்தியதால் தோன்றியது எனக் கூறுகின்றனர் அமெரிக்க நிபுணர்கள்.

ஆனால் கைத்தொலைபேசி .gp3 வீடியோ எடுக்கப்பட்டது ஜூலை 18 எனப் பதிவாகியுள்ளது. ஆனால் அந்த வீடியோ ஜனவரி மாதத்தில் ஒரு இராணுவ வீரரால் எடுக்கப்பட்டதென ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர் அமைப்பு கூறுகிறது. இந்த திகதிச் சிக்கலைத் தீர்ப்பது பற்றியும் தாம் சிந்தித்து வருவதாக இன அழிப்புக்கு எதிரான தமிழர் அமைப்பு கூறியுள்ளது.


செய்திகள்: இந்தியா, தமிழகம், வணிகம், வீடியோ, கட்டுரைகள், நேர்காணல்

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ]
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] []
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்]
ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] []
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்]
தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] []
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்]
வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] []
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா மேற்கொண்ட சில இரகசிய நடவடிக்கைகள்! (பாகம்-3) : நிராஜ் டேவிட்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 04:15.38 PM ]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு சில இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் சாத்தியம் உள்ளது என்று தமிழ் நாட்டு ஊடகவியலாளர் கூறிய விடயம் பற்றி கடந்த சில வாரங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.  அந்த இரகசிய புலனாய்வு நடவடிக்கைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது பலருக்கும் வெறும் ஊகமாகவே இருக்கின்றது. [மேலும்]
விளம்பரம்
advertisement