இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:
மட்டுவில் பகுதியில் அண்மையில் மீளக் குடியமர்ந்த குடும்பம் ஒன்று தங்கியுள்ள வீட்டினுள் இரவு நேரம் சீருடை அணிந்து கறுப்புத் துணியினால் முகத்தை மறைத்துக் கட்டியபடி ஆயுதங்களுடன் சென்ற நால்வர் தூக்கத்திலிருந்த வீட்டிலுள்ளோரை எழுப்பி அடையாள அட்டை, குடும்ப அட்டை என்பவற்றைப் பரிசீலித்தனர்.
அவ்வேளையில் வீட்டிலிருந்த சிறுவன் அங்கிருந்து மெதுவாக நகர்ந்து அயலில் உள்ள வீடுகளுக்குச் சென்று அங்கு தூக்கத்திலிருந்தவர்களை எழுப்பி விடயத்தைத் தெரிவித்தான்.
உடனேயே அயலவர்கள் அனைவரும் உஷாரடைந்து குறித்த வீட்டினைச் சுற்றி வளைத்து நின்றனர்.
இதனை அவதானித்த திருடர்கள் தாம் கொண்டு வந்த சைக்கிளையும் கைவிட்டு தப்பியோடினர்.
இதேவேளை இச்சம்பவம் பற்றி பொலிஸாருக்கு முறைப்பாடு கொடுத்ததையடுத்து உடனடியாக அங்கு விரைந்த பொலிஸார் கைவிடப்பட்ட சைக்கிளைக் கைப்பற்றி சைக்கிளின் அடையாளங்களை வைத்து இருவரைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் சாவகச்சேரி பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்தபோது அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது. |