மணலாறு சிலோன் தியேட்டர்ப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை காலை 6:00 மணியளவில் இராணுவத்தினர் மிகச்செறிவான எறிகணைத் தாக்குதல்களுடன் ஐந்து முனைகளில் முன்னேற்றத் தாக்குதலை நடத்தினர். இந்த பெருமெடுப்பிலான நடவடிக்கை மீது விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
விடுதலைப் புலிகளின் தாக்குதலில் படையினர் பலர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர். மோதல் தொடர்ந்தவண்ணம் உள்ளது.
கொல்லப்பட்ட படையினரின் நால்வரின் உடலங்கள் உட்படப் படைப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட படைப்பொருட்கள் விவரம்:
ஆர்.பி.ஜிக்கள் - 02
ஏ.கே.எல்.எம்.ஜி - 01
ரி-56 ரக துப்பாக்கிகள் - 04
ஆர்.பி.ஜி எறிகணைகள் - 07
ஆர்.பி.ஜி புறப்பலர்கள் - 07
தலைக்கவசங்கள் - 03
ரவைத்தடுப்பு அணிகள் - 03
ஜக்கற் ரவைக்கூடுதாங்கிகள் - 07
ஏ.கே ரவைக்கூடுகள் - 19 ஆகியன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. |