குறிப்பிட்ட சில அரசாங்கத்துடன் தொடர்புடைய அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு மட்டுமே வன்னி மாவட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் யாழ்ப்பாணத்திலும் அந்த நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கான தடையை அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையிலான ஜனாதிபதியின் அதிரடிப்படையினர் விதித்து வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக தற்போது யாழ்ப்பாணத்தில் சுமார் 15 ஆயிரம் வீடுகளை நிர்மாணித்து கொடுத்த அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றுக்கும் அரசாங்கம் தடைவிதித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை வன்னி மாவட்டத்தில் தமது வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான செயற்திட்டங்களை பல அரச சார்பற்ற நிறுவனங்கள் கையளித்துள்ள போதும், அவை எதுவும் இதுவரையில் பொறுப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலை சர்வதேச நிறுவனங்களுக்கு மாத்திரம் இன்றி, உள்நாட்டு நிறுவனங்களுக்கு நேர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |