Switch to
   
   
   
செய்தி
இலங்கையின் உயர்மட்டக் குழு இந்தியாவுக்கு பயணம்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 10:22.12 AM GMT +05:30 ]
இலங்கை அரசாங்கத்தின் உயர் மட்ட குழு ஒன்று, விரைவில் இந்தியாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் தலைமையிலான இந்த உயர்மட்டக் குழுவில், பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இந்த விஜயம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தின் நடுப்பகுதியில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகஸ்ட் மாதத்தின் ஆரம்பத்தில் பசில் ராஜபக்ஷ ஜப்பானுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்கிறார். அந்த விஜயத்தை நிறைவு செய்துகொண்டு இலங்கை வந்ததன் பின்னர், அவர் இந்தியா செல்லலாம் என கூறப்படுகிறது.

அத்துடன் தற்போது அமெரிக்காவில் உள்ளதாக கூறப்படும் கோத்தபாய ராஜபக்ஷ, இந்த விஜயத்தின் நிமித்தம், ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் நாடுதிரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த குழுவின் இந்திய விஜயத்தின் போது, இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெளிவுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், சர்வதேச ரீதியாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை தொடர்பிலான நிபுணர்கள் குழு தொடர்பிலும் இந்த குழு ஆராய்வு மேற்கொள்ளும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை தமிழக முதல்வர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் இலங்கைத் தமிழர்கள் மீள்குடியேற்றம் தொடர்பான நடவடிக்கைகளை பார்வையிட விஷேட பிரதிநிதி ஒருவரை அனுப்பிவைக்கவேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 
 


செய்திகள்: இந்தியா, தமிழகம், வணிகம், வீடியோ, கட்டுரைகள், நேர்காணல்

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
"அகம் புலம் தமிழர் வாழ்வியல் மாநாடு" சிறப்புற வாழ்த்துகின்றேன்: கி.வீரமணி
[ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 11:55.06 AM ] []
உலகத் தமிழ் பண்பாட்டியக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்தினை தெரிவித்திருந்தார். [மேலும்]
ஈழத் தமிழ் மக்களை மீட்டுச் சேர்க்க வேண்டிய மாபெரும் பணியினை நாம் மேற்கொள்ளவேண்டும்: பழ.நெடுமாறன்
[ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 11:52.36 AM ] []
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வாழ்த்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர். [மேலும்]
உலகத் தமிழினம் தமிழினக் காப்பில் உடன் கவனம் செலுத்த வேண்டும்: காசி ஆனந்தன்
[ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 11:41.45 AM ] []
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற கவிஞர் காசி ஆனந்தன் தன் சிறப்பு  வாழ்த்தறிக்கை  ஒன்றினை வெளியிட்டிருந்தார். [மேலும்]
உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் மாநாடு சிறப்புற வாழ்த்துக்கின்றோம்
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 10:13.19 PM ] []
உ.த.ப. இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற ஹம் ஸ்ரீகாமாக்ஷி அம்பாள் ஆலய ஆதீனகர்த்தா ஆறுமுக பாஸ்கரகுருக்கள், ஜேர்மனி அருட்திரு அந்தோனி பெர்னாண்டோ பெனற் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். [மேலும்]
(2ம் இணைப்பு)
கிளிநொச்சி மாவட்ட பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கல்விமேம்பாட்டு உதவி நிதி கோரிக்கை
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 08:37.04 PM ] []
உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் அகம் புலம் தமிழர் வாழ்வியல் மகானாடினை முன்னிட்டு உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியம் கிளிநொச்சி மாவட்ட அதிபர்கள் சங்கத்துடன் இணைந்து முன்னெடுக்கும்.. [மேலும்]
தமிழின உயிர்கொலை நாள்- செப்டம்பர் 5 : கிழக்கு பல்கலைக்கழக அகதிமுகாம் படுகொலையின் 20ஆண்டு நினைவு நாள் இன்று - இரா.துரைரத்தினம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 12:24.36 PM ] []
ஓகஸ்ட் செப்டம்பர் மாதங்கள் கிழக்கு மாகாண மக்களைப் பொறுத்தவரை அவர்களின் வாழ்வில் மறக்க முடியாத துன்பங்களையும் இழப்புக்களையும் கொடுத்த மாதங்கள். 1990ஆம் ஆண்டு யூன் மாதம் விடுதலைப்புலிகளுக்கும் ஸ்ரீலங்கா படைகளுக்கும் இடையில் போர் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு அம்பாறை பிரதேசங்களை ஸ்ரீலங்கா படைகள்..... [மேலும்]
விளம்பரம்
advertisement