Switch to
   
   
   
செய்தி
(2ம் இணைப்பு)
கொழும்பு சிறைச்சாலையில் தமிழ் கைதிகள் மீது தாக்குதல் : தமிழ் கைதிகளிடம் இருந்து கையடக்க தொலைபேசிகள் மீட்பு
[ சனிக்கிழமை, 24 யூலை 2010, 11:40.22 AM GMT +05:30 ]
கொழும்பு விளக்கமறியல் சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகள் மீது சிறைக்காவலர்களும், சிங்கள கைதிகளும் தாக்குதலை நடத்தி வருவதாக சிறைச்சாலையில் உள்ள தமிழ் கைதிகள் தமிழ்வின் இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளனர்.

இன்று காலை சிறைக்காவலர் ஒருவர் தமிழ் கைதி மீது தாக்குதல் நடத்தியதாகவும் இதனையடுத்து அங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சுமார் 380 தமிழ் கைதிகளும் ஆட்சேபனை தெரிவித்ததை தொடர்ந்து தமிழ் கைதிகள் மீது சிங்கள கைதிகள் தாக்குதல்களை நடத்தியதாகவும் தற்போதும் இந்த தாக்குதல் தொடர்வதாக சிறைக்கைதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிங்கள கைதிகள் தமிழ் கைதிகள் மீது தாக்குதலை நடத்தும் போது சிறைக்காவலர்கள் அதை தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் சிங்கள கைதிகளின் தாக்குதல்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் தமிழ் கைதிகள் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்த தமிழ் கைதிகளை வைத்தியசாலைக்கு எடுத்து செல்வதற்கும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு பா.அரியநேத்திரன், பொன் செல்வராசா ஆகியோர் புனர்வாழ்வு மற்றும் சிறை சீர்திருத்தத் துறை அமைச்சர் திரு டியூ குணசேகர மற்றும் சிறைச்சாலை ஆணையாளர் ஆகியோருடன் தொடர்பு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் கைதிகளிடம் இருந்து கையடக்க தொலைபேசிகள் மீட்பு

கொழும்பு சிறைச்சாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் அதிக அளவிலான கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கைதிகளை பார்வையிடுவதற்காக வெளி இடங்களில் இருந்து வருகின்றவர்கள் பல்வேறு தடைசெய்யப்பட்ட பொருட்களை வழங்கிவருவதாக வெளியான தகவலை அடுத்தே இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் போது விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் இருந்து பல கையடக்க தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த தகவலை சிறைச்சாலை ஆணையாளர் மேஜர் ஜெனரல் வீ. ஆர். சில்வா தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளுக்கும், சிங்கள கைதிகளுக்கும் இடையில் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் இது தொடர்பிலான மேலதிக தகவல்களை வழங்க சிறைச்சாலை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

இதேவேளை சிறைசாலைக்கு கைதிகளை பார்வையிடுவதற்கு வருகின்றவர்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை புதிய முறையில் மேற்கொள்ளவிருப்பதாக சிறைசாலை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
சித்திரவதைக்குள்ளான ஆரியவதிக்கு ஆவிப் பிரச்சினையாம்: சவூதி சென்ற குழுவினர் தகவல்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 09:28.06 AM ]
சவூதி அரேபியாவில் ஆணி அறையப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக கூறப்படும் ஆரியவதி தொடர்பில் தற்போது சவூதி அரேபியாவில் வேறு விதமான கருத்தே நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
கட்டுநாயக்கவில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இரு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் பலி
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 03:54.35 AM ]
கட்டுநாயக்க பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றில் இரண்டு உயர்தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த மோதல் சம்பவத்தில் மேலும் 25 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
வெள்ளையனை நோக்கி பூலித்தேவன் பாய்ந்தார்! சிங்களவனை நோக்கி பிரபாகரன் பாய்ந்தார்!: காசிஆனந்தன்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 03:20.19 AM ]
வெள்ளைக்காரனை எதிர்த்து பூலித்தேவன் பாய்ந்தார். அதே போல் தம்பி பிரபாகரன் சிங்களவனை எதிர்த்து பாய்ந்தார். சிங்களவனின் கொடுமை எத்தனை?எத்தனை? இவ்வாறு நெல்லை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற விடுதலைப்போராட்ட வீரர் பூலித்தேவனின் 295வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றுகையில் தெரிவித்தார். [மேலும்]
(2ம் இணைப்பு)
வெற்றிச்சரிதம் படைக்க ஜேர்மனியில் ஒன்றுதிரளட்டும் உலகத்தமிழினம் - வைகோ
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 11:27.27 AM ] []
நேற்றைய வரலாறு, இன்றைய அவலங்கள், நாளைய விடியல் இவை பற்றிச் சிந்திக்கவும், செயற்திட்டங்களை வகுக்கவும் வியூகங்கள் அமைக்கவும் வெற்றிச்சரிதம் படைக்கவும் ஜேர்மனியில் நடைபெறும் உ.த.ப.இயக்க ஐரோப்பிய ஒன்றியத்தினால் நடைபெறும் மாநாட்டுக்கு வைகோ விடுத்துள்ள வாழ்த்தறிக்கை. [மேலும்]
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள மாநாட்டு அறிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 11:03.36 AM ]
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள அகம் புலம் தமிழர் வாழ்வியல் மகாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மகாநாட்டு அமைப்பாளரும், ஐரோப்பிய ஒன்றியத்தலைவருமான துரை கணேசலிங்கம், மகாநாட்டு செயலாளருமான ப.பரமேஷ்வரன் ஆகியோர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள சிறப்பறிக்கை. [மேலும்]
தமிழின உயிர்கொலை நாள்- செப்டம்பர் 5 : கிழக்கு பல்கலைக்கழக அகதிமுகாம் படுகொலையின் 20ஆண்டு நினைவு நாள் இன்று - இரா.துரைரத்தினம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 12:24.36 PM ] []
ஓகஸ்ட் செப்டம்பர் மாதங்கள் கிழக்கு மாகாண மக்களைப் பொறுத்தவரை அவர்களின் வாழ்வில் மறக்க முடியாத துன்பங்களையும் இழப்புக்களையும் கொடுத்த மாதங்கள். 1990ஆம் ஆண்டு யூன் மாதம் விடுதலைப்புலிகளுக்கும் ஸ்ரீலங்கா படைகளுக்கும் இடையில் போர் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு அம்பாறை பிரதேசங்களை ஸ்ரீலங்கா படைகள்..... [மேலும்]
விளம்பரம்
advertisement