Switch to
   
   
   
செய்தி
யாழ்.அபிவிருத்திப் பணி ஒப்பந்தங்கள் திட்டமிட்டு சிங்களவர்களுக்கு வழங்கப்படுகிறது
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:42.21 AM GMT +05:30 ]
யாழ்ப்பாணத்தில் சர்வதேச தொண்டு நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி பணிகளின் ஒப்பந்தங்கள், தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்களவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது, தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள குடும்பங்களின் வருமானத்தை அதிகரிக்கும் பொருட்டு, அரசாங்கத்தினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் கட்டிடத்தொழில் உட்பட்ட, தேர்ச்சி பெற்ற தொழில்சார் பணியாளர்கள் இருக்கின்ற போதும், தென்னிலங்கை சிங்களவர்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளமை, யாழ்ப்பாண மக்கள் இடையில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் சம்மேளத்தின் தலைவரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் இணைப்பு செயலாளருமான சீ வீ கே சிவஞானம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதன் காரணமாக, யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருமான இழப்பு ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், உள்நாட்டில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வரும் வெளிநாட்டு நிறுவனங்கள், தமது சொந்த முகவர்களையே பிரதிநிதிகளாக நிறுத்த வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

அவ்வாறு நிறுத்தப்படும் பட்சத்திலேயே, யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களுக்கான தொழில் வாய்ப்புகளும், வருமானம் உழைப்பதற்கான சந்தர்ப்பங்களும் அதிகரிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
"அகம் புலம் தமிழர் வாழ்வியல் மாநாடு" சிறப்புற வாழ்த்துகின்றேன்: கி.வீரமணி
[ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 11:55.06 AM ] []
உலகத் தமிழ் பண்பாட்டியக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்தினை தெரிவித்திருந்தார். [மேலும்]
ஈழத் தமிழ் மக்களை மீட்டுச் சேர்க்க வேண்டிய மாபெரும் பணியினை நாம் மேற்கொள்ளவேண்டும்: பழ.நெடுமாறன்
[ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 11:52.36 AM ] []
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வாழ்த்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர். [மேலும்]
உலகத் தமிழினம் தமிழினக் காப்பில் உடன் கவனம் செலுத்த வேண்டும்: காசி ஆனந்தன்
[ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 11:41.45 AM ] []
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற கவிஞர் காசி ஆனந்தன் தன் சிறப்பு  வாழ்த்தறிக்கை  ஒன்றினை வெளியிட்டிருந்தார். [மேலும்]
உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் மாநாடு சிறப்புற வாழ்த்துக்கின்றோம்
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 10:13.19 PM ] []
உ.த.ப. இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற ஹம் ஸ்ரீகாமாக்ஷி அம்பாள் ஆலய ஆதீனகர்த்தா ஆறுமுக பாஸ்கரகுருக்கள், ஜேர்மனி அருட்திரு அந்தோனி பெர்னாண்டோ பெனற் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். [மேலும்]
(2ம் இணைப்பு)
கிளிநொச்சி மாவட்ட பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கல்விமேம்பாட்டு உதவி நிதி கோரிக்கை
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 08:37.04 PM ] []
உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் அகம் புலம் தமிழர் வாழ்வியல் மகானாடினை முன்னிட்டு உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியம் கிளிநொச்சி மாவட்ட அதிபர்கள் சங்கத்துடன் இணைந்து முன்னெடுக்கும்.. [மேலும்]
தமிழின உயிர்கொலை நாள்- செப்டம்பர் 5 : கிழக்கு பல்கலைக்கழக அகதிமுகாம் படுகொலையின் 20ஆண்டு நினைவு நாள் இன்று - இரா.துரைரத்தினம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 12:24.36 PM ] []
ஓகஸ்ட் செப்டம்பர் மாதங்கள் கிழக்கு மாகாண மக்களைப் பொறுத்தவரை அவர்களின் வாழ்வில் மறக்க முடியாத துன்பங்களையும் இழப்புக்களையும் கொடுத்த மாதங்கள். 1990ஆம் ஆண்டு யூன் மாதம் விடுதலைப்புலிகளுக்கும் ஸ்ரீலங்கா படைகளுக்கும் இடையில் போர் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு அம்பாறை பிரதேசங்களை ஸ்ரீலங்கா படைகள்..... [மேலும்]
விளம்பரம்
advertisement