அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டபோது தமிழகத்தின் 21 எம்.பி. க்களுக்கு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை நிலைவரத்தை நேரில் கண்டறிந்து ஆய்வு செய்வதற்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கொழும்பு செல்லவுள்ளார் என, பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளமை குறித்து அரசாங்கம் சார்பில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
இலங்கை நிலைவரத்தை ஆய்வுசெய்வதற்கு, மத்திய அரசு சிறப்புப் பிரதிநிதியை அனுப்பவேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம், முதல்வர் கருணாநிதி அண்மையில் கோரியிருந்தார். இதற்குப் பதிலளித்து பிரதமர்,மு தல்வர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்வாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கொழும்பு செல்லவுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை நிலைவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கொழும்பு செல்லவுள்ளதாகவும் அந்த அதிகாரி இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளுடனும், வட. கிழக்குப் பகுதிகளிலும் நேரில் சென்று ஆய்வுசெய்யவுள்ளார் என்றும் பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இவ்விடயம் குறித்து மேலும் கூறியதாவது:
இந்தியாவின் பிரதிநிதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு இடம்பெயர்ந்தோர் நிலைமை தொடர்பில் ஆராயலாம். மேலும் இலங்கை வெளிவிவகார அமைச்சுடன் பேச்சுக்களை நடத்தலாம். ஆனால் இவை இரு நாடுகளுக்கும் இடையிலான சுமுக உறவின் அடிப்படையில் இடம்பெற வேண்டும். காரணம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மிகவும் நெருக்கமான மற்றும் சுமுகமான உறவு காணப்படுகின்றது. அதாவது மிக நெருங்கிய நட்புறவு காணப்படுகின்றது என்று கூற முடியும்.
நாங்கள் அடிக்கடி இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம். இந்நிலையில் தமிழக முதல்வர் இவ்வாறான கோரிக்கை ஒன்றை இந்திய பிரதமரிடம் விடுத்துள்ளார். அதன் படி பிரதமர் மன்மோகன் சிங் வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரியை அனுப்புவதாக அறிவித்துள்ளார்.
இரண்டு நாடுகளுக்கும் இடையில் காணப்படுகின்ற நட்புறவின் அடிப்படையில் இந்திய வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி வருகை தரலாம். நிலைமைகளை ஆராயலாம். அதனை எமது அரசாங்கம் வரவேற்கும். அதற்கு இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்பும் கிடைக்கும். காரணம் இந்த விஜயம் சுமுக உறவின் அடிப்படையில் இடம்பெறுவதாகும்.
அதனைவிடுத்து இலங்கைக்கு பலவந்தமாக பருப்பு போட்டதைப் போன்றதல்ல என்பதனை வலியுறுத்த வேண்டும்.
இதேவேளை அண்மையில் இந்தியாவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஜயம் மேற்கொண்டிருந்தபோது தமிழக எம்.பி. க்கள் 21 பேர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவேண்டும் என்று அழைப்பு விடுத் திருந்தார்.
|