ஜனநாயக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகணேசன் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த யோசனையை எதிர்வரும் 22ம் திகதி நடைபெறவுள்ள மலையக தமிழ் கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பின் போது முன்வைக்கவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின் பின்னர் இது தொடர்பில் அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றை முன்வைக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உருவாக்கப்படும் நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை போல இது மலையக தமிழ் மக்களுக்கான தனி மாகாணமாக அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மலையகத்தில் தனியான மாகாண சபை, பிரதேச செயலகங்கள் என்பன உருவாக்கப்படுவதன் ஊடாக மலைய தமிழ் மக்களுக்கான சேவைகளை இலகுவாக பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களை ஒன்றிணைத்து ஒரே மாகாணமாக்கும் திட்டத்தை முதன் முதலில் மலையக மக்கள் முன்னணி கடந்த 1994ம் ஆண்டு முன்வைத்தது.
கட்சியின் உபத்தலைவர் அ. லோரன்ஸின் தகவல்படி, இது தொடர்பில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடம் முன்வைத்த அரசியல் திருத்த யோசனைகளின் போதும் தமது கட்சியினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதற்கான அனுமதி கிடைக்கப்படும் பட்சத்தில் மலையக மக்களுக்கு கிடைக்கின்ற சிறந்த வரப்பிரசாதமாக அது அமையும் என அ.லோரன்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார். |