Switch to
   
   
   
செய்தி
ஆடைகளுக்காக நாட்டின் இறைமையை அடகு வைக்க முடியாது : அரசாங்கம்
[ திங்கட்கிழமை, 19 யூலை 2010, 03:50.36 AM GMT +05:30 ]
தைத்த ஆடைகளுக்காக நாட்டின் இறைமையை அடகு வைக்க முடியாதென அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்தை பெற்றுக் கொள்வதற்காக இலங்கையின் சுயாதீனத் தன்மையை இழக்கத் தயாரில்லை என இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.

வரிச் சலுகைத் திட்டத்தை ரத்து செய்வதன் மூலம் நாட்டின் அபிவிருத்தியை தடுக்க முடியும் என சிலர் நினைப்பதாகவும் அதற்கு எந்த வகையிலும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிக்கும் சில நாடுகள் இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகிக்க முனைப்பு காட்டி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

வரிச் சலுகைத் திட்டத்தை ரத்து செய்து அதன் மூலம் இலங்கையை நிர்க்கதியாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் வெற்றியடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாவலப்பிட்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
"அகம் புலம் தமிழர் வாழ்வியல் மாநாடு" சிறப்புற வாழ்த்துகின்றேன்: கி.வீரமணி
[ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 11:55.06 AM ] []
உலகத் தமிழ் பண்பாட்டியக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்தினை தெரிவித்திருந்தார். [மேலும்]
ஈழத் தமிழ் மக்களை மீட்டுச் சேர்க்க வேண்டிய மாபெரும் பணியினை நாம் மேற்கொள்ளவேண்டும்: பழ.நெடுமாறன்
[ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 11:52.36 AM ] []
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வாழ்த்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர். [மேலும்]
உலகத் தமிழினம் தமிழினக் காப்பில் உடன் கவனம் செலுத்த வேண்டும்: காசி ஆனந்தன்
[ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 11:41.45 AM ] []
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற கவிஞர் காசி ஆனந்தன் தன் சிறப்பு  வாழ்த்தறிக்கை  ஒன்றினை வெளியிட்டிருந்தார். [மேலும்]
உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் மாநாடு சிறப்புற வாழ்த்துக்கின்றோம்
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 10:13.19 PM ] []
உ.த.ப. இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற ஹம் ஸ்ரீகாமாக்ஷி அம்பாள் ஆலய ஆதீனகர்த்தா ஆறுமுக பாஸ்கரகுருக்கள், ஜேர்மனி அருட்திரு அந்தோனி பெர்னாண்டோ பெனற் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். [மேலும்]
(2ம் இணைப்பு)
கிளிநொச்சி மாவட்ட பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கல்விமேம்பாட்டு உதவி நிதி கோரிக்கை
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 08:37.04 PM ] []
உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் அகம் புலம் தமிழர் வாழ்வியல் மகானாடினை முன்னிட்டு உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியம் கிளிநொச்சி மாவட்ட அதிபர்கள் சங்கத்துடன் இணைந்து முன்னெடுக்கும்.. [மேலும்]
தமிழின உயிர்கொலை நாள்- செப்டம்பர் 5 : கிழக்கு பல்கலைக்கழக அகதிமுகாம் படுகொலையின் 20ஆண்டு நினைவு நாள் இன்று - இரா.துரைரத்தினம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 12:24.36 PM ] []
ஓகஸ்ட் செப்டம்பர் மாதங்கள் கிழக்கு மாகாண மக்களைப் பொறுத்தவரை அவர்களின் வாழ்வில் மறக்க முடியாத துன்பங்களையும் இழப்புக்களையும் கொடுத்த மாதங்கள். 1990ஆம் ஆண்டு யூன் மாதம் விடுதலைப்புலிகளுக்கும் ஸ்ரீலங்கா படைகளுக்கும் இடையில் போர் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு அம்பாறை பிரதேசங்களை ஸ்ரீலங்கா படைகள்..... [மேலும்]
விளம்பரம்
advertisement