Switch to
   
   
   
செய்தி
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் இன்று தற்காலிகமாகத் திறக்கப்படுகிறது
[ புதன்கிழமை, 21 யூலை 2010, 01:50.08 AM GMT +05:30 ]
முல்லைத்தீவு மாவட்ட தற்காலிக நீதிமன்றம் இன்று காலை 8.45 மணிக்குத் திறந்து வைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம், வவுனியா குடியியல் மேல்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி ஜே.விஸ்வநாதன், வவுனியா குடியியல் மேல்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி டி.என்.சமரக்கோன் ஆகியோரால் நீதிமன்றக் கட்டடம் திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்த நீதிமன்றின் நீதிபதியாக அப்துல் மஜீத் முகமட் ரியால் நியமிக்கப்பட்டு தற்போது சாவகச்சேரி நீதிமன்றில் பதில் நீதிபதியாகக் கடமையாற்றுவது குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய நீதிமன்றங்களை ஒரே நாளில் திறந்து வைக்க திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் போதிய கட்டட வசதிகள் இல்லாமையாலும், குறைந்த எண்ணிக்கையானவர்கள் மீளக்குடியமர்ந்ததாலும் நீதிமன்றத்தை இயக்குவது பிற்போடப்பட்டிருந்தது.

தற்காலிக கட்டடம் ஒன்றில் நீதிமன்றம் இன்று திறந்து வைக்கப்படுகின்றது. காலப்போக்கில் நீதிமன்றம் விஸ் தரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்றம் முன்னர் இயங்கி வந்த இடத்தில் நிரந்தரக் கட்டடம் ஒன்றை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது


செய்திகள்: இந்தியா, தமிழகம், வணிகம், வீடியோ, கட்டுரைகள், நேர்காணல்

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
சித்திரவதைக்குள்ளான ஆரியவதிக்கு ஆவிப் பிரச்சினையாம்: சவூதி சென்ற குழுவினர் தகவல்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 09:28.06 AM ]
சவூதி அரேபியாவில் ஆணி அறையப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக கூறப்படும் ஆரியவதி தொடர்பில் தற்போது சவூதி அரேபியாவில் வேறு விதமான கருத்தே நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
கட்டுநாயக்கவில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இரு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் பலி
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 03:54.35 AM ]
கட்டுநாயக்க பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றில் இரண்டு உயர்தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த மோதல் சம்பவத்தில் மேலும் 25 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
வெள்ளையனை நோக்கி பூலித்தேவன் பாய்ந்தார்! சிங்களவனை நோக்கி பிரபாகரன் பாய்ந்தார்!: காசிஆனந்தன்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 03:20.19 AM ]
வெள்ளைக்காரனை எதிர்த்து பூலித்தேவன் பாய்ந்தார். அதே போல் தம்பி பிரபாகரன் சிங்களவனை எதிர்த்து பாய்ந்தார். சிங்களவனின் கொடுமை எத்தனை?எத்தனை? இவ்வாறு நெல்லை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற விடுதலைப்போராட்ட வீரர் பூலித்தேவனின் 295வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றுகையில் தெரிவித்தார். [மேலும்]
(2ம் இணைப்பு)
வெற்றிச்சரிதம் படைக்க ஜேர்மனியில் ஒன்றுதிரளட்டும் உலகத்தமிழினம் - வைகோ
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 11:27.27 AM ] []
நேற்றைய வரலாறு, இன்றைய அவலங்கள், நாளைய விடியல் இவை பற்றிச் சிந்திக்கவும், செயற்திட்டங்களை வகுக்கவும் வியூகங்கள் அமைக்கவும் வெற்றிச்சரிதம் படைக்கவும் ஜேர்மனியில் நடைபெறும் உ.த.ப.இயக்க ஐரோப்பிய ஒன்றியத்தினால் நடைபெறும் மாநாட்டுக்கு வைகோ விடுத்துள்ள வாழ்த்தறிக்கை. [மேலும்]
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள மாநாட்டு அறிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 11:03.36 AM ]
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள அகம் புலம் தமிழர் வாழ்வியல் மகாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மகாநாட்டு அமைப்பாளரும், ஐரோப்பிய ஒன்றியத்தலைவருமான துரை கணேசலிங்கம், மகாநாட்டு செயலாளருமான ப.பரமேஷ்வரன் ஆகியோர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள சிறப்பறிக்கை. [மேலும்]
தமிழின உயிர்கொலை நாள்- செப்டம்பர் 5 : கிழக்கு பல்கலைக்கழக அகதிமுகாம் படுகொலையின் 20ஆண்டு நினைவு நாள் இன்று - இரா.துரைரத்தினம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 12:24.36 PM ] []
ஓகஸ்ட் செப்டம்பர் மாதங்கள் கிழக்கு மாகாண மக்களைப் பொறுத்தவரை அவர்களின் வாழ்வில் மறக்க முடியாத துன்பங்களையும் இழப்புக்களையும் கொடுத்த மாதங்கள். 1990ஆம் ஆண்டு யூன் மாதம் விடுதலைப்புலிகளுக்கும் ஸ்ரீலங்கா படைகளுக்கும் இடையில் போர் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு அம்பாறை பிரதேசங்களை ஸ்ரீலங்கா படைகள்..... [மேலும்]
விளம்பரம்
advertisement