Switch to
   
   
   
செய்தி
சர்வகட்சிக் குழு சர்வகாட்சியாக மாறியுள்ளது: பா.அரியநேத்திரன் பாராளுமன்ற உறுப்பினர்
[ புதன்கிழமை, 21 யூலை 2010, 08:15.40 AM GMT +05:30 ]
128 தடவைகள் கூடிய சர்வகட்சிக் குழு தற்போது சர்வகாட்சியாக மாறியுள்ளதாக மட்டு. மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அவர்கள் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

இனப்பிரச்சினை தொடர்பாக ஆராயும் பொருட்டு அமைக்கப்பபட்ட சர்வகட்சி குழுவானது 128 தடவைகளாக கூடி ஆராய்ந்த போதும் தழிழர்களுக்கு அதனால் தற்போது எதுவித பலாபலனும் இல்லை மாறாக பொது மக்களுக்கான ஒரு காட்சிப்பொருளாகவே தென்படுகின்றது.

இக்குழுவின் அறிக்கை தொடர்பாக மலையக மக்கள் முன்னணியைச் சேர்ந்த திரு யோகராஜனும்  இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் அவர்களும் கூறிய கருத்துக்களும் இக்குழுவின் தலைவர் திஸ்ஸ விதாரண அவர்கள் கூறிய கருத்துக்களும் ஒன்றுக்கொன்று முரணானவையாக இருக்கின்றன. மேலும் இக்குழுவின் அறிக்கை தற்போது ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதே தவிர உத்தியோக பூர்வமாக இன்னும் வெளியிடப்படவில்லை.

எனவே இந்த குழுவின் அறிக்கையும் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கான ஒரு செயற்பாடாகவேதான் அமைந்துள்ளது.

1956 ஆம் ஆண்டு தொடக்கம் இவ்வாறுதான் தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை சர்வதேசமும் குறிப்பாக இந்தியாவும் இப்போதாவது புரிந்துகொள்ளவேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் மாநாடு சிறப்புற வாழ்த்துக்கின்றோம்
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 10:13.19 PM ] []
உ.த.ப. இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற ஹம் ஸ்ரீகாமாக்ஷி அம்பாள் ஆலய ஆதீனகர்த்தா ஆறுமுக பாஸ்கரகுருக்கள், ஜேர்மனி அருட்திரு அந்தோனி பெர்னாண்டோ பெனற் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். [மேலும்]
(2ம் இணைப்பு)
கிளிநொச்சி மாவட்ட பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கல்விமேம்பாட்டு உதவி நிதி கோரிக்கை
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 08:37.04 PM ] []
உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் அகம் புலம் தமிழர் வாழ்வியல் மகானாடினை முன்னிட்டு உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியம் கிளிநொச்சி மாவட்ட அதிபர்கள் சங்கத்துடன் இணைந்து முன்னெடுக்கும்.. [மேலும்]
18 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:40.49 PM ]
18 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் மூன்றில் இரண்டு அதிகாரத்துடன் சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.  சீர்திருத்தத்திற்கு ஆதரவாக 161 வாக்குகளும் எதிராக 17 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. [மேலும்]
பாராளுமன்ற முன்றலில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டக் காட்சிகள்
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 12:56.28 PM ] []
உத்தேச 18 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு ஆதரவளித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. [மேலும்]
புளொட்- புலிகள் மோதலும் அதனை வேடிக்கை பார்த்த இந்தியப் படையும்: உண்மையின் தரிசனம் (பாகம்-17)
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 06:29.07 AM ] []
இந்திய இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இலங்கைக்கு மீண்டும் வந்த புளொட் அமைப்பு வடக்கு கிழக்கின் பல பகுதிகளிலும் முகாம்களை அமைத்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்தன. [மேலும்]
தமிழின உயிர்கொலை நாள்- செப்டம்பர் 5 : கிழக்கு பல்கலைக்கழக அகதிமுகாம் படுகொலையின் 20ஆண்டு நினைவு நாள் இன்று - இரா.துரைரத்தினம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 12:24.36 PM ] []
ஓகஸ்ட் செப்டம்பர் மாதங்கள் கிழக்கு மாகாண மக்களைப் பொறுத்தவரை அவர்களின் வாழ்வில் மறக்க முடியாத துன்பங்களையும் இழப்புக்களையும் கொடுத்த மாதங்கள். 1990ஆம் ஆண்டு யூன் மாதம் விடுதலைப்புலிகளுக்கும் ஸ்ரீலங்கா படைகளுக்கும் இடையில் போர் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு அம்பாறை பிரதேசங்களை ஸ்ரீலங்கா படைகள்..... [மேலும்]
விளம்பரம்
advertisement