Switch to
   
   
   
செய்தி
மீள்குடியேற்றம் தொடர்பாக அறிய விரும்பினால் நேரில் சென்று பார்க்க முடியும்: கெஹலிய
[ செவ்வாய்க்கிழமை, 27 யூலை 2010, 01:37.20 PM GMT +05:30 ]
வடக்கில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் தொடர்பாக அறிய விரும்புபவர்களுக்கு அங்கு நேரடியாகச் சென்று பார்க்க முடியும். அதற்கு நாம் தடைவிதிக்கப் போவதில்லை என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.  அமைச்சர் கெஹலிய இது பற்றி மேலும் கூறுகையில்,

இதுவரை 2 லட்சத்து 87 ஆயிரத்து 393 பேர் மீள் குடியேற்றப்பட்டுள்ளனர். ஒரு வருடத்திற்குள் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் வரை முழுமையாக அனைத்து வசதிகளுடனும் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். நாளொன்றில் 700 முதல் 750 பேர் வரை மீள்குடியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

இன்னும் 50 லட்சம் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படாமல் உள்ளன. இப் பிரதேசங்களில் மக்களை மீளக்குடியமர்த்துவது சட்டரீதியான பிரச்சினையாகும். கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்பட்டதன் பின்னரே மக்களை இப்பிரதேசங்களில் குடியமர்த்த முடியும்.

நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு இந்திய அரசாங்கம் உதவி செய்தபோதும் அரசாங்கம் 860 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்களைக் கொள்வனவு செய்து இப்பணியில் ஈடுபடுகின்றது.

அரச சார்பற்ற நிறுவனங்கள் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுபட்டாலும் இலங்கை இராணுவமே 95 வீதமான பணிகளை மேற்கொண்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
"அகம் புலம் தமிழர் வாழ்வியல் மாநாடு" சிறப்புற வாழ்த்துகின்றேன்: கி.வீரமணி
[ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 11:55.06 AM ] []
உலகத் தமிழ் பண்பாட்டியக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்தினை தெரிவித்திருந்தார். [மேலும்]
ஈழத் தமிழ் மக்களை மீட்டுச் சேர்க்க வேண்டிய மாபெரும் பணியினை நாம் மேற்கொள்ளவேண்டும்: பழ.நெடுமாறன்
[ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 11:52.36 AM ] []
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வாழ்த்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர். [மேலும்]
உலகத் தமிழினம் தமிழினக் காப்பில் உடன் கவனம் செலுத்த வேண்டும்: காசி ஆனந்தன்
[ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 11:41.45 AM ] []
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற கவிஞர் காசி ஆனந்தன் தன் சிறப்பு  வாழ்த்தறிக்கை  ஒன்றினை வெளியிட்டிருந்தார். [மேலும்]
உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் மாநாடு சிறப்புற வாழ்த்துக்கின்றோம்
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 10:13.19 PM ] []
உ.த.ப. இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற ஹம் ஸ்ரீகாமாக்ஷி அம்பாள் ஆலய ஆதீனகர்த்தா ஆறுமுக பாஸ்கரகுருக்கள், ஜேர்மனி அருட்திரு அந்தோனி பெர்னாண்டோ பெனற் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். [மேலும்]
(2ம் இணைப்பு)
கிளிநொச்சி மாவட்ட பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கல்விமேம்பாட்டு உதவி நிதி கோரிக்கை
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 08:37.04 PM ] []
உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் அகம் புலம் தமிழர் வாழ்வியல் மகானாடினை முன்னிட்டு உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியம் கிளிநொச்சி மாவட்ட அதிபர்கள் சங்கத்துடன் இணைந்து முன்னெடுக்கும்.. [மேலும்]
தமிழின உயிர்கொலை நாள்- செப்டம்பர் 5 : கிழக்கு பல்கலைக்கழக அகதிமுகாம் படுகொலையின் 20ஆண்டு நினைவு நாள் இன்று - இரா.துரைரத்தினம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 12:24.36 PM ] []
ஓகஸ்ட் செப்டம்பர் மாதங்கள் கிழக்கு மாகாண மக்களைப் பொறுத்தவரை அவர்களின் வாழ்வில் மறக்க முடியாத துன்பங்களையும் இழப்புக்களையும் கொடுத்த மாதங்கள். 1990ஆம் ஆண்டு யூன் மாதம் விடுதலைப்புலிகளுக்கும் ஸ்ரீலங்கா படைகளுக்கும் இடையில் போர் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு அம்பாறை பிரதேசங்களை ஸ்ரீலங்கா படைகள்..... [மேலும்]
விளம்பரம்
advertisement