|
|
|
|
| சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதல்களில் கடந்த 3 தினங்களில் 179 பொதுமக்கள் பாதுகாப்பு வலயத்தில் பலி |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2009, 01:15.37 PM GMT +05:30 ] | |
சிறிலங்கா படையினரின் தாக்குதலில் கடந்த 3 நாட்களில் 179 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் குறைந்தது 76 பேர், 15 வயதுக்கும் குறைவான சிறுவர்கள். அத்துடன் 16 கர்ப்பிணி தாய்மார்களும் கொல்லப்பட்டனர்.109க்கும் அதிகமான, 15 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் பாரிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். |
(வீடியோ பார்ப்பதற்கு (VIDEO) வீடியோ என்ற படத்தின் மேல் அழுத்தவும்)
சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட ஆயிரக்கணக்கான எறிகணை வீச்சுக்களில், 45 சதவீதமானவை பாதுகாப்பு வலயங்களிலேயே வீழ்ந்துள்ளன.
இதற்கிடையில் கடந்த சனிக்கிழமை, காயமடைந்தவர்களை அழைத்துச் செல்லவந்த வெளிநாட்டு அதிகாரிகள் சிலர், அவர்கள் வந்த செஞ்சிலுவை சங்கத்தின் கப்பல் மீதான இராணுவத்தினரின் தாக்குதலில் இருந்த தப்பியுள்ளனர்.
இந்த தாக்குதலின் போது, செஞ்சிலுவை சங்கத்தின் கப்பலின் பலகணி ஒன்று சேதமடைந்துள்ளது.
அத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பணியாளர் ஒருவர், இராணுவத்தினரின் எறிகணை வீச்சில் காயமடைந்துள்ளார்.
அத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை செஞ்சிலுவை சங்க பணியாளர் ஒருவரின் மனைவியும் எறிகணை வீச்சினால் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.




|
|
|
|
|
| காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது! - வைகோ கண்டனம்! |
| [ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:02.33 PM ] |
தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான். [மேலும்] |
| சுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலும்: சோக பூமியில் துரோக அரசியல் |
| [ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 03:37.01 PM ] |
ஈழத்தில் இரக்கமற்ற இரத்தக் கொடுமையை அதிபர் மகிந்த ராஜபக்ஷ நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தவின் அரசியல் ஆளுமை காரணமா பொன்சேகாவின் இராணுவ வலிமை முக்கியமா என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்! இவ்வாறு தமிழத்திலிருந்து வெளிவரும் வார இதழான ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது [மேலும்] |
| சரணடைந்த புலி உறுப்பினர்கள் பலரின் நிலை என்ன?: ஜோன் ஹோம்ஸிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கேள்வி |
| [ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 12:47.40 PM ] |
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் உதவி மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர் ஜோன் ஹோம்ஸை சந்தித்துள்ளனர். இதன் போது படையினரிடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட 20 ஆயிரம் புலி உறுப்பினர்களின் நிலைமை என்னவென தமிழ் கூட்டமைப்பினர் ஹோம்ஸிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். [மேலும்] |
| பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி: ஜெயலலிதா |
| [ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:49.54 AM ] |
இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கடந்த 17ஆம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையை விமர்சித்து, பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்] |
| தமிழ் கூட்டமைப்பு பா.உ. சிவநாதன் கிசோர்,ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பு |
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:33.25 AM ] [ ] |
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|