Switch to
   
   
   
செய்தி
தமிழீழ ஆதரவாளர் கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டதற்கு காரணமான உரைக்கான காணொளி
[ புதன்கிழமை, 25 மார்ச் 2009, 09:19.13 AM GMT +05:30 ]
பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி அவர்கள் 26.02.2009 அன்று திண்டுக்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எரிகிறது ஈழம் என்ற தலைப்பில் உரையாற்றியதால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவ்வுரையின் காணொளிகளை இங்கே காணவும்.
ராஜீவ் கொலையல்ல! மரண தண்டனை என்றும் , நாள்தோறும் ஈழத்தில் தமிழ் உறவுகள் செத்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களை காப்பாற்ற எண்ணாமல் TELO , EROS முதலான போராளி அமைப்புகளும் பல ஆண்டுகளுக்கு முன்பே விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து ஒன்றாக புலிகளாக போராடிக் கொண்டிருப்பது தெரியாமல் சகோதரச் சண்டை என்று அறிவுக்கு ஒவ்வாமல் மனிதநேயமில்லாமல் கூறிக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களை கண்டித்தும், தமிழீழத்தேசிய தலைவர் அவர்களை கைது செய்ய தீர்மானம் இயற்றிய ஜெ.ஜெயலலிதா போன்ற அரசியல்வாதிகளை பற்றிய உண்மைகளை ஆதாரத்தோடு வெளிப்படுத்தி உரையாற்றினார்.

இவ்வாறு அரசியல்வாதிகளின் மனிதநேயமற்ற நாடகத்தினை மக்களுக்கு தெளிவாக கூறியதால் தமிழின துரோக அரசானது தமிழுணர்வாளர் கொளத்தூர் மணி அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. ஏற்கெனவே ஈழப்போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் தனது தோட்டத்திலேயே ஈழப்போராளிகளை தங்க வைத்து போராளிகளுக்கு பயிற்சி அளித்ததற்காகவும், வேலூர் சிறையிலிருந்து போராளிகள் சுரங்கம் தோண்டி தப்பியதற்கு உதவியதாகவும், கர்நாடக வாழ் தமிழர்களை காக்க போராடியதற்காகவும் கைது செய்யப்பட்டு 6 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்தவர்.
பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ]
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] []
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்]
ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] []
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்]
தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] []
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்]
வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] []
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா மேற்கொண்ட சில இரகசிய நடவடிக்கைகள்! (பாகம்-3) : நிராஜ் டேவிட்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 04:15.38 PM ]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு சில இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் சாத்தியம் உள்ளது என்று தமிழ் நாட்டு ஊடகவியலாளர் கூறிய விடயம் பற்றி கடந்த சில வாரங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.  அந்த இரகசிய புலனாய்வு நடவடிக்கைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது பலருக்கும் வெறும் ஊகமாகவே இருக்கின்றது. [மேலும்]
விளம்பரம்
advertisement