One moment please..
 
செய்தி
மீள்குடியமர்த்தும் மக்களுக்கு வழங்கும் உதவித்தொகையை 50 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை
[ வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 12:45.50 PM GMT +05:30 ]
மீளக்குடியேற்றப்படும் மக்களுக்கு 25 ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்படுகின்றது. உடனடி தேவைக்காக 5 ஆயிரம் ரூபா வழங்கப்படுகின்றது. எனினும் தற்போது வழங்கப்படுகின்ற 25 ஆயிரம் ரூபாவை 50 ஆயிரம் ரூபாவாக அதிகரித்து வழங்குமாறு கேட்டுக் கொள்ளுகின்றேன். என தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் என்.ஸ்ரீகாந்தா பா.உ. நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார்.


அத்துடன் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியேற்றுவதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பியையும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீனையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இடைக்கால கணக்கறிக்கை பிரேரணை மீதான மூன்றாவது நாள் விவாதத்தில் நேற்று பாராளுமன்றத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் :-

யுத்தம் காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பேரழிவுக்கு உள்ளாகியுள்ளன. வீடுகள், வீதிகள், பாடசாலைகள் சேதமடைந்துள்ளன. ஆஸ்பத்திரிகளில் வைத்தியர்கள், மற்றும் தாதியர் பற்றாக்குறை நிலவுகிறது. இக்குறைபாடுகள் நிவர்த்திக்கப்பட வேண்டும்.

வடக்கு, கிழக்கு புனரமைப்பு பணிகளுக்கு கட்சி சார்பின்றி ஒத்துழைப்பு நல்க நாம் தயாராகவுள்ளோம். தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக கட்சி வேறுபாடுகளை மறந்து சகலரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும்.

சிங்கள மக்களிடமிருந்து எந்தத் தீர்வையும் பறித்தெடுக்க தமிழ் மக்கள் விரும்பவில்லை. அதேநேரம், தமிழ் மக்கள் மீது எந்தத் தீர்வையும் திணிக்கவும் முடியாது.

எமக்கு அரசியல் அணிகள் குறித்து அக்கறை கிடையாது. நாம் எந்தக் கூட்டணியிலும் சிக்கிக்கொள்ளமாட்டோம். ஆட்சியைக் கைப்பற்றும் ஆசை எமக்குக் கிடையாது. அதிகாரப் போட்டி இந்நாட்டின் தேசியப் பிரச்சினையை இழுத்தடிக்கக்கூடாது.

எமது கடமைகளைச் செய்யத் தயாராகவுள்ளோம். எம்மால் இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும். எல்லாக் கட்சிகளும். ஓரணியில் நின்றால் இந்நாட்டு மக்களுக்கு நல்லதொரு எதிர்காலம் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.


செய்திகள்: இந்தியா, தமிழகம், வணிகம், வீடியோ, கட்டுரைகள், நேர்காணல்

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது! - வைகோ கண்டனம்!
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:02.33 PM ]
தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான். [மேலும்]
சுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலும்: சோக பூமியில் துரோக அரசியல்
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 03:37.01 PM ]
ஈழத்தில் இரக்கமற்ற இரத்தக் கொடுமையை அதிபர் மகிந்த ராஜபக்ஷ நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தவின் அரசியல் ஆளுமை காரணமா பொன்சேகாவின் இராணுவ வலிமை முக்கியமா என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்! இவ்வாறு தமிழத்திலிருந்து வெளிவரும் வார இதழான ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது [மேலும்]
சரணடைந்த புலி உறுப்பினர்கள் பலரின் நிலை என்ன?: ஜோன் ஹோம்ஸிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கேள்வி
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 12:47.40 PM ]
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் உதவி மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர்  ஜோன் ஹோம்ஸை சந்தித்துள்ளனர். இதன் போது படையினரிடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட 20 ஆயிரம் புலி உறுப்பினர்களின் நிலைமை என்னவென தமிழ் கூட்டமைப்பினர் ஹோம்ஸிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். [மேலும்]
பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி: ஜெயலலிதா
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:49.54 AM ]
இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கடந்த 17ஆம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையை விமர்சித்து, பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்]
தமிழ் கூட்டமைப்பு பா.உ. சிவநாதன் கிசோர்,ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பு
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:33.25 AM ] []
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். [மேலும்]
தமிழர்களின் தன்னுரிமையினை ஏற்றுக் கொள்ளாத சர்வதேசத்தின் இரட்டை நிலைப்பாடு உணர்த்தி நிற்கும் தேசியத் தலைமையின் இருப்பின் அவசியம்
[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 03:45.04 PM ]
தலைவன் பிறந்ததனாலும், விடுதலை பயணதத்தில் முதல் வித்து வீழ்ந்ததனாலும் கார்த்திகையே பெருமையடைந்தது. ஈழத்தமிழர்கள் வாழ்க்கையில் மாத்திரமன்றி உலகத் தமிழர்களையும் தாண்டி உலக வல்லரசு நாடுகளை பொறுத்த வரையிலும் அதிக எதிர்பார்ப்பிற்கு உரியதாகவும் முக்கியத்துவம் மிக்கதுமாக ஒவ்வொரு கார்த்திகை மாதமும் அமைந்திருந்தது எவ்வளவிற்கு எவ்வளவு உண்மையோ அவ்வளவிற்கு அவ்வளவு ஏன் அதனைவிட அதிகமாக எதிர்பார்ப்பும் முக்கியத்துவமும் வாய்ந்ததாக அமைந்துள்ளது இந்த கார்த்திகை மாதம். [மேலும்]
விளம்பரம்