Switch to
   
   
   
செய்தி
நாடு திரும்பிய சரத் பொன்சேகா ஜனாதிபதியையோ, சகோதரரையோ சந்திக்கவில்லை
[ வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 09:00.25 AM GMT +05:30 ]
அமெரிக்காவில் யுத்த மீறல் தொடர்பான விசாரணைக்கு முகம் கொடுக்காது நாடு திரும்பிய கூட்டுப்படை தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா, இதுவரையில் முப்படைத்தளபதியான ஜனாதிபதியையோ அல்லது பாதுகாப்பு செயலாளரனான கோத்தபாய ராஜபக்ஷவையோ சந்திக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரத் பொன்சேகா நேற்று அதிகாலை நாடு திரும்பிய பின்னர் இவ்வாறான சந்திப்பு ஒன்று நேற்று மாலைக்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அந்த சந்திப்பு இடம்பெறவில்லை.

இதிலிருந்து இன்னமும், இந்த இரண்டு தரப்புக்கும் இடையிலான முறுகல் நிலை தணியவில்லை என்றே பாதுகாப்பு தரப்பு கருதுகிறது.

அமெரிக்காவில் கோத்தாபாயவுக்கு எதிராக யுத்த மீறல் விசாரணையில் சாட்சியாக சமுகமளிக்க அழைக்கப்பட்டிருந்த போதே சரத் பொன்சேகா அதனை கைவிட்டு, நாடு திரும்பினார்.

எனினும், இதனை ஐக்கிய தேசிய கட்சி மாற்று கோணத்தில் பார்க்கிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல, கோத்தாபய ராஜபக்ஷவை காப்பாற்றிக் கொள்வதற்காகவே அரசாங்கம் சரத் பொன்சேகாவை முனைப்புடன் இலங்கைக்கு அழைத்ததாக தெரிவித்துள்ளார்.

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இரண்டாவது அமர்வினை அறிவித்துள்ளது! தம் மீதான அவதூறு பற்றி ருத்ரா விளக்குகிறார்!
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:11.16 AM ]
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம். [மேலும்]
யாழ். புலோலி வாசிக்கு மரண தண்டனை : தீர்ப்பு வழங்கப்பட்டதும் கைதி மாடியில் இருந்து குதித்துள்ளார்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:15.51 PM ]
யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று கைதி ஒருவருக்கு மரண தண்டனையை விதித்தது. இதனை தண்டனை வழங்கப்பட்ட கைதி யாழ்ப்பாண நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் இருந்து கீழே குதித்துள்ளார். [மேலும்]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை: சவூதி அரேபியா
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:28.17 PM ]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை என சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்பு
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 03:37.32 PM ] []
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது: நிருபமா முன் பேராசிரியர் சிற்றம்பலம் கவலை
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 02:42.17 AM ] []
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா வழங்கிய ஆயுதங்களே பொது மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாக தமிழ் மக்கள் இன்னமும் கருதுவதாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். [மேலும்]
ஒரு பெண் போராளியின் கண்ணீர் கதை! அனாதைகளாக்கப்பட்ட பிள்ளைகளின் கண்ணீரை யார் துடைப்பார்?: இரா.துரைரத்தினம்
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 08:04.17 AM ] []
தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கையோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டு விடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள். [மேலும்]
விளம்பரம்
advertisement