|
|
|
| தலைவர் பிரபாகரனின் தந்தையின் ஓய்வூதியக் கொடுப்பனவு ரத்து: ஓய்வூதிய ஆணையாளர் தகவல் |
| [ வியாழக்கிழமை, 05 நவம்பர் 2009, 05:19.51 AM GMT +05:30 ] |
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் ஓய்வூதியக் கொடுப்பனவுகளை ரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. |
வேலுப்பிள்ளையை படையினர் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருவதனால், அவரது முகவரி குறித்த பிரச்சினை காரணமாக தற்காலிகமாக ஓய்வூதியக் கொடுப்பனவுகளை ரத்து செய்ய தீர்மானித்துள்ளதாக ஓய்வூதிய ஆணையாளர் கே.ஏ. திலகரட்ன தெரிவித்துள்ளார்.
1924ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ம் திகதி பிறந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளை, 1943 பெப்ரவரி மாதம் 01 ம் திகதி இலங்கை புகையிரதத் திணைக்களத்தில் முதலாவதாக சேவையில் இணைந்து கொண்டுள்ளார்.
பிரபாகரனின் தந்தை இராணுவத்தினரால் கண்டு பிடிக்கப்படும் வரையில் கிளிநொச்சி அரசாங்க அதிபர் திணைக்களத்திலிருந்து 16865 ரூபா ஓய்வூதியமாகப் பெற்றுக் கொண்டுள்ளார்.
வேலுப்பிள்ளையிடம் விசாரணைகள் பூர்த்தியடைந்ததன் பின்னர் நிரந்தர முகவரி அறிவிக்கப்படும் பட்சத்தில் நிலுவை ஓய்வூதியக் கொடுப்பனவுகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். |
|
|
|
| வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம் |
| [ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ] |
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] | | (2ம் இணைப்பு) |
| பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] [ ] |
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்] |
| ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] [ ] |
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்] |
| தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] [ ] |
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்] |
| வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] [ ] |
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்] |
|
|
| advertisement |
|
|