Switch to
   
   
   
செய்தி
நாடு திரும்பிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை
[ புதன்கிழமை, 04 நவம்பர் 2009, 09:48.30 AM GMT +05:30 ]
கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக வெளி நாட்டில் தங்கியிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவர் இன்று முற்பகல் நாடு திரும்பியுள்ளனர்.
இந்தியாவில் தங்கியிருந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் லண்டணில் தங்கியிருந்த யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோரே இன்று நாடு திரும்பியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக இந்தியாவிலும்,நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இரு வருடங்களுக்கு மேலாக இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தங்கியிருந்து இறுதியாக லண்டணில் தங்கியிருந்தார்.

குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் செல்வம் அடைக்கலநாதன் விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் ,இன்று மாலை வாக்குமூலமொன்றை பதிவு செய்வது பற்றி அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

நாடு திரும்பிய குறிப்பிட்ட இருவரும் இன்று நாடாளுமன்ற அமர்விலும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் கடந்த சில மாதங்களாக லண்டணில் தங்கியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தனும் அடுத்த சில நாட்களில் நாடு திரும்புவார் என எதிர் ர்க்கப்பட்ட போதிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஜெயானந்தமூர்த்தி மற்றும் எஸ். கஜேந்திரன் ஆகியோர் நாடு திரும்புவது தொடர்பாக தகவல்கள் எதுவும் இது வரை வெளியாகவில்லை.
பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ]
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] []
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்]
ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] []
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்]
தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] []
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்]
வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] []
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா மேற்கொண்ட சில இரகசிய நடவடிக்கைகள்! (பாகம்-3) : நிராஜ் டேவிட்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 04:15.38 PM ]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு சில இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் சாத்தியம் உள்ளது என்று தமிழ் நாட்டு ஊடகவியலாளர் கூறிய விடயம் பற்றி கடந்த சில வாரங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.  அந்த இரகசிய புலனாய்வு நடவடிக்கைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது பலருக்கும் வெறும் ஊகமாகவே இருக்கின்றது. [மேலும்]
விளம்பரம்
advertisement